சாணிபவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற தாய்… காப்பாற்றிய குழந்தைகள்
கோவை: கோவை அருகே சாணிபவுடர் குடித்து தற்கொலை செய்ய முயன்ற தாயை அவரது இரண்டு குழந்தைகள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கருமத்தப்பட்டி பகுதியைசார்ந்தவர் நடராஜ் இவர் கடந்த 2000ஆம் ஆண்டில் உஷா என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சதீஷ், பிரகாஷ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சதீஷ் ஏழாம் வகுப்பும் பிரகாஷ் ஆறாம் வகுப்பும் படிக்கிறார்கள்.
உஷாவின் கணவர் நடராஜுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. இதனால் இவர்களின் வாழ்வில் தினசரி தகராறுதானாம்.
குடி பழக்கத்தை மட்டும் எந்தச் சூழ்நிலையிலும் நடராஜால் விட முடியவில்லை. இந்நிலையில் ஞாயிறன்று நன்றாகக் குடித்து விட்டு வந்து மனைவி உஷாவிடம் தகராறு செய்தார் நடராஜ். பிள்ளைகள் எவ்வளவோ தடுத்தும் கெஞ்சியும் உஷாவை அடித்து உதைத்துக் கொடுமைபடுத்தினார். மேலும் ஆத்திரம் தீராமல் வீட்டில் உள்ள பொருட்களையும் தனது போனையும் போட்டு உடைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
உஷா தனது குழந்தைகளுடன் நடராஜை இரண்டு நாட்களாக எங்குத் தேடியும் பலனளிக்கவில்லை. நடராஜ் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. இதனால் காலையில் கண்விழித்த பிள்ளைகள் சதிஷும் பிரகாஷும் அம்மாவை எழுப்பினர். அவர் கண் விழிக்கவில்லை. பதறி துடித்த பிள்ளைகள் அக்கம் பக்கம் உள்ளோரை நாடினர். அம்மாவை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதுள்ளனர் ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை.
தவித்த பிள்ளைகள் அருகில் இருந்தவரின் செல்போனை வாங்கி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தனர். உடனடியாகத் தங்கள் தாயை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து உஷா உயிர்பிழைத்தார். கண்விழித்த உஷா, இனியேனும் இது போன்ற தவறான முடிவை எடுக்கமாட்டேன் என்று குழந்தைகளை கட்டி அணைத்து அழுதது காண்பவர்களின் கண்களை குளமாக்கியது.
வாழ்வை தொலைத்து உஷா வருந்தினாலும் அவரது பிள்ளை செல்வங்கள் அவருக்கு விழுதுகளாக இருந்து காத்து விட்டனர். இந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு இருக்கும் அறிவு அந்த குடிகார தகப்பனுக்கு இல்லாமல் போய்விட்டதே.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications