கணவரின் செக்ஸ் தொல்லை தாங்காமல் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்த பெண்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கணவரின் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
தூத்துக்குடி முருகேசன் நகரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். டிரைவர். அவரது மனைவி முத்துமீனா(28). அவர்களுக்கு செந்தில் (6), மதிவேல் (3), பிரபு (3 மாதம்) என்ற 3 மகன்கள் உள்ளனர். பிரபு பிறந்த பிறகு மீனா குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார். குடிப்பழக்கம் உள்ள முத்துகிருஷ்ணன் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பங்கை மது குடிக்கவே செலவு செய்துவிடுவார்.
மேலும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவார். இது குறித்து மீனா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிப்காட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். உடனே போலீசார் முத்துகிருஷ்ணனை அழைத்து அறிவுரை கூறியுள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மீனாவிடம் முத்துகிருஷ்ணன் தனது ஆசைக்கு இணங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே அவரை அடித்து உதைத்துள்ளார்.
மேலும் நேற்று இரவும் இது குறித்து அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முத்துகிருஷ்ணன் மீனாவை குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டிற்கு செல்லுமாறு மிரட்டியுள்ளார். இதையடுத்து மீனா வீட்டில் இருந்து ஹேர்டையை எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்து தானும் குடித்தார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினரிடம் மீனா நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அந்த 4 பேரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணையில், தனது கணவர் செக்ஸ் தொல்லை கொடுத்ததாலும், அவரது ஆசைக்கு இணங்க மறுத்த தன்னை அடித்ததாலும் இந்த முடிவை எடுத்ததாக மீனா தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications