கொடுமைப்படுத்திய சித்தி.. தட்டிக் கேட்காத தந்தை.. கடற்கரையில் நின்று கதறி அழுத பெண் டாக்டர்!
நாகர்கோவில்: கன்னியாகுமரி கடற்கரையில் நின்று கொண்டு ஒரு இளம் பெண் டாக்டர் தனது சித்தி கொடுமை தாங்க முடியாமல் கதறி அழுதது அங்கு வந்தோரை அதிர வைத்தது. போலீஸார் அவரை மீட்டு ஆறுதல் கூறினர். தான் திரும்ப வீட்டுக்குப் போக விரும்பவில்லை என்று அப்பெண் கூறி விட்டதால் அவரை எங்கு அனுப்புவது என்பது குறித்து போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நேற்று ஒரு பெண் தனியாக கடலோரமாக அமர்ந்திருந்தார். அழுதபடி இருந்த அப்பெண் திடீரென கடலுக்குள் போகத் தொடங்கினார். இதைப் பார்த்த அங்கு ரோந்தில் இருந்த போலீஸார் ஓடிப் போய் அவரைத் தடுத்து மீட்டனர். அவர்களிடம் அப்பெண் கதறி அழுதார். எனக்கு வாழப் பிடிக்கவில்லை. என்னை விடுங்கள் என்று கூறி கதறினார்.
இதையடுத்து அப்பெண்ணை சமாதானப்படுத்திய போலீஸார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மகளிர் போலீஸார் அப்பெண்ணை அமர வைத்து ஆறுதல் கூறி விசாரித்தனர். அப்போது அவர் தர்மபுரியயை அடுத்த தொப்பூரைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.

சித்தி கொடுமை
இப்பெண்ணுக்கு தாயார் இல்லை. தந்தை 2வது திருமணம் செய்து கொண்டார். வந்த சித்தியோ, இப்பெண்ணை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். தனக்குப் பிறந்த 3 குழந்தைகள் மீது மட்டுமே பாசத்தைக் கொட்டி வந்துள்ளார்.

ஹோமியோபதி டாக்டர்
இப்பெண் ஹோமியோபதி படித்துள்ளார். தனது வீட்டுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். டாக்டராக வேலை பார்த்தும் கூட சித்தி தொல்லையிலிருந்து இப்பெண்ணால் தப்ப முடியவில்லை. தினசரி சித்தி கொடுமை அதிகரித்துள்ளது.

மவுனம் காத்த தந்தை
தனது சித்தியின் தொல்லை குறித்து தந்தையிடம் கூறியும் கூட அவர் எதுவும் பேசுவதில்லையாம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அப்பெண் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

கன்னியாகுமரி கடற்கரையில்
ரயில் ஏறி நாகர்கோவில் வந்த அவர் அங்கிருந்து கன்னியாகுமரி வந்துள்ளார். கடற்கரைக்கு வந்த அவருக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. இதனால் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். அப்போதுதான் போலீஸார் அவரை மீட்டனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications