ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த அம்மா, மகள் - மருத்துவமனையில் உயிர் ஊசல்
சென்னை: சென்னை தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையத்தில், 3 வயது பெண் குழந்தையுடன் ஓடும் மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு சென்னை கடற்கரைக்கு மின்சார ரயில் சென்றது. காலை நேரம் என்பதால் ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.

சானிடோரியம் ரயில் நிலையத்தை கடந்து ரயில் செல்லும்போது கூட்ட நெரிசலில் 30 வயது இளம்பெண் ஒருவர், 3 வயது பெண் குழந்தையுடன் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். உடனே பயணிகள் ரயிலை நிறுத்தினர்.
உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த தாய், மகள் இருவரையும் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடும் பெண் சுயநினைவு இழந்து விட்டார். குழந்தையும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி வருகிறது. இவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை அந்த பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் போல உள்ளார்.
இருவரையும் தாம்பரம் ரயில்வே போலீசார் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தாய், மகள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களைப் பற்றிய விவரங்களை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications