சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை
சென்னை: அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளையும் கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழும்பூர் பாந்தியன் சாலையை ஒட்டியுள்ள 9 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் மொத்தம் 61 வீடுகள் உள்ளன. இதன் 3-ஆவது தளத்தில் வசித்து வந்தவர் சாரதா (70). இவர் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்.

கடந்த ஓராண்டாக இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவரது சகோதரர் மகள் தன்யா நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு துணையாக இருப்பதற்காகவே கேரளாவில் இருந்து சாரதா வந்துள்ளார்.
இந்நிலையில் தன்யா கல்லூரி முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தப்போது சாரதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. காதுகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. அவர் அணிந்திருந்த தங்க நகைகள் காணாமல் போயிருந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
-
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications