Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டுக்கே வந்து கணவரை பங்கு போட்ட கள்ளக்காதலி.. தாலியால் கழுத்தை இறுக்கிக் கொன்ற மனைவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவரை திருமணம் செய்து கொண்டு தனது வீட்டுக்கே வந்து குடியேறி தனது கணவருடன் சந்தோஷமாக இருந்த உதவிப் பேராசிரியையை மனைவி, தாலிக் கயிற்றால் கழுத்தை இறுக்கி நெரித்துக் கொலை செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காடு விஜிஎன் மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் சாம்பசிவா ராவ். 38 வயதான இவரது மனைவி ஸ்ருதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

Woman kills college lecturer after marrying her husband

சமீபத்தில் சாம்பசிவ ராவின் வீட்டுக்கு அவரது தோழியான ராஜலட்சுமி என்பவர் வந்து குடியேறினார். தனது கணவர் சுரேஷுடன் பிரச்சினை இருப்பதாகவும், அது தீரும் வரை இங்கு தங்குவதாகவும் கூறி ராஜலட்சுமி குடியேறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ராஜலட்சுமி குளியலறையில் வழுக்கி விழுந்து காயமடைந்து விட்டதாக ஸ்ருதி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு ராஜலட்சுமியைக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ராஜலட்சுமி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது.

போலீஸ் விசாரணையின்போது ஸ்ருதி முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைக் கூறவே அவரை தீவிரமாக விசாரித்தனர். அதில் உண்மை வெளிப்பட்டது.

இதுதொடர்பாக ராஜலட்சுமி அளித்துள்ள வாக்குமூலம்:

எனது கணவர் சாம்பசிவராவ் நசரத்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். எங்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சந்தோஷமாக சென்ற எங்களது வாழ்க்கையில் புயல்போல் வந்தார் ராஜலட்சுமி.

தனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ராஜலட்சுமி, எனது கணவர் வேலைபார்க்கும் அதே கல்லூரியில் தான் முதலில் வேலை பார்த்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜலட்சுமி தனது உறவினரான சுரேஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தான் பணிபுரிந்த கல்லூரியை விட்டு, சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலைக்கு சேர்ந்தார். ஆனால் எனது கணவருக்கும், அவருக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு போகவில்லை. தொடர்ந்தது.

இது சுரேஷுக்குத் தெரிய வந்ததும் அவருக்கும், ராஜலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து எனது கணவர் ராஜலட்சுமியைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, இருவரும் ரகசியமாக திருமணமும் செய்து கொண்டனர்.

இதையடுத்து 3 நாட்களுக்கு முன்பு ராஜலட்சுமியுடன் வீட்டுக்கு வந்தார் எனது கணவர். என்னை அழைத்து உன்னுடன் இனி வாழ விரும்பவில்லை. உன்னுடன் வாழவும் பிடிக்கவில்லை. இவளுடன்தான் இனி வாழ்வேன். நீ ஒதுங்க விடு, அல்லது விவாகரத்து பெற்றுக் கொண்டு போய் விடு என்று கூறி விட்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

என் கண் முன்பாகவே எனது கணவரும், ராஜலட்சுமியும் குடும்பம் நடத்தியதால் அதிர்ச்சி அடைந்தேன். ராஜலட்சுமி மீது கோபம் கொண்டேன். அவரை விரட்டத் திட்டமிட்டேன். 2 நாட்களுக்கு முன்பு எனது கணவர் வேலைக்குப் போனதும் ராஜலட்சுமியுடன் சண்டை பிடித்தேன்.

பின்னர் பாத்ரூக்குப் போனார் ராஜலட்சுமி. பின் தொடர்ந்து சென்ற நான் அங்கு வைத்து அவரை சரமாரியாக தாக்கி உதைத்தேன். இதில் ராஜலட்சுமிக்கு தலை, முகம் உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. மயிங்கி விழுந்த அவரை விடாமல் வெறியுடன் முதுகில் ஏறி உட்கார்ந்து அவர் கட்டியிருந்த தாலியாலேயே கழுத்தை இறுக்கி நெரித்தேன். இதில் ராஜலட்சுமி இறந்து போனார். அதன் பின்னர் அவர் வழுக்கி விட்டதாக கூறி சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை கூப்பிட்டேன் என்று கூறியுள்ளார் ஸ்ருதி.

ஸ்ருதியைக் கைது செய்த போலீஸார் அவரை தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+