70 வயதிலும் "ஆசை"... அழைத்த கணவரை அரிவாளால் போட்டுத் தள்ளிய முதல் மனைவி!

கரூர் அருகே தனிமையில் இருக்கலாம் என அழைத்த கணவரை முதல் மனைவி அரிவாளால் வெட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

கரூர்: மனைவியுடன் தனிமையில் இருக்க அழைத்த காரணத்துக்காக கரூரைச் சேர்ந்த 70 வயது முதியவர் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் லாலாபேட்டை வேங்காம்பட்டியைச் சேர்ந்த குப்புசாமி, இளஞ்சியம் என்பவரை திருமணம் செய்தார். அவரது 3 மகள்களுக்கும் திருமணம் நடந்துவிட்டது.

2-வது திருமணம்

2-வது திருமணம்

இந்நிலையில் திருச்சி பெட்டவாய்த்தலை மாரியாயி என்பவரை குப்புசாமி 2-வதாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் முதல் மனைவியின் நினைவு வந்த குப்புசாமி வேங்காம்பட்டிக்கு வந்துள்ளார்.

முதல் மனைவி வீட்டில்..

முதல் மனைவி வீட்டில்..

முதல் மனைவி இளஞ்சியுடன் தனிமையில் இருக்க விரும்பி குப்புசாமி அழைத்திருக்கிறார். தம்மை விட்டுவிட்டு ஓடிப் போன குப்புசாமி மீது ஆத்திரத்தில் இருந்திருக்கிறார் இளஞ்சி.

அரிவாள் வெட்டு

அரிவாள் வெட்டு

இதனால் உருட்டை கட்டை மற்றும் அரிவாளால் குப்புசாமி தாக்கியுள்ளார் இளஞ்சி. இதில் குப்புசாமி மரணமடைந்துவிட்டார். இதையடுத்து இளஞ்சியை கரூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

தனிமையில் இருக்க அழைத்த காரணத்துக்காக முதியவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கரூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+