மதுரையில் போலீஸ் நிலையம் அருகே பெண் வெட்டிக்கொலை: நகைக் கொள்ளை
சென்னை: மதுரையில் பட்டப்பகலில் பெண் ஒருவர் நகைக்காக வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எஸ்.எஸ்.காலனி சுப்பிரமணியபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மாதவன், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது மனைவி செண்பகவள்ளி (வயது 66). இவர்களது வீடு போலீஸ் நிலையத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவிலேயே உள்ளது.
இன்று பகல் 12 மணி அளவில் மாதவன் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது செண்பக வள்ளி மட்டுமே வீட்டில் தனியாக இருந்தார்.
சிறிது நேரத்தில் மாதவன் வீடு திரும்பியபோது கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு செண்பக வள்ளி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த செண்பகவள்ளி உடலில் அரிவாள் வெட்டு மற்றும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன.
போலீசார் நடத்திய விசாரணையில், செண்பக வள்ளியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. எனவே நகைக்காக கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
செண்பகவள்ளி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ‘மர்ம' மனிதன் திட்டமிட்டே வீட்டுக்குள் புகுந்து நகை பறிப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், அப்போது செண்பகவள்ளி நகையை கொடுக்க மறுத்து சத்தம் போட்டதால் அவரை ‘மர்ம' மனிதன் கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை பதிவு செய்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
பட்டப்பகலில் போலீஸ் நிலையம் அருகே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எஸ்.எஸ். காலனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications