கள்ளக்காதலுக்கு இடைஞ்சல்.. கணவனை போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போட்ட பெண் உட்பட மூவர் கைது
திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு அந்த பெண்ணின் கணவரை கொலை செய்ய திட்டமிட்ட ஆயுதப்படை காவலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video

தேனி: கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருக்கும் கணவனை கொலை செய்ய வேண்டும் என்று காதலனுடன் சேர்ந்து திட்டமிட்ட பெண்ணையும் அதற்கு உடந்தையாக இருந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமி, 36, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த போது அனுமந்தன்பட்டியை சேர்ந்த சுகந்தி மீது காதல் ஏற்படவே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கு சாட்சியாக 13 வயதில் சஞ்சய் என்ற மகன் இருக்கிறான்.
சொந்த ஊர் திரும்பிய இந்த தம்பதியினர் கம்பத்தில் கிராமச்சாவடி தெருவில் விளையாட்டு வீரர்களுக்கான ஆடை விற்பனை செய்யும் கடை வைத்தனர்.

தகாத உறவு
வாழ்க்கை சந்தோஷமாக போன நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் வடிவில் சாமி வாழ்க்கையில் புயல் வீசியது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வந்த சுதாகருக்கும், சாமியின் மனைவி சுகந்திக்கும் தகாத உறவு ஏற்பட்டது.

கணவன் கண்டிப்பு
இது சாமிக்கு தெரியவரவே அதிர்ச்சியடைந்தார். மனைவியை கண்டித்தும் சுகந்தி திருந்த வில்லை. சாமியை கொலை செய்த சுதாகருடன் சேர்ந்து திட்டம் போட்டார். கணவன் மனைவி சண்டை அதிகரிக்கவே, வீட்டைவிட்டு சுகந்தி வெளியேறினார்.

போலீசில் புகார்
கடந்த 18ஆம் தேதி சாமி, தனது கடையில் வைத்து மனைவி சுகந்தியின் செல்போனை ஆய்வு செய்தார். அப்போது சுகந்தியும், காவலர் சுதாகரும் கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இருவர் பேசிய ஆடியோ பதிவாகியிருந்தது. இது குறித்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் சாமி புகார் அளித்ததோடு ஆதாரத்தையும் ஒப்படைத்தார்.

3 பேர் கைது
சுகந்தியை தேடி வந்த போலீசார் உத்தமபாளையம் அருகேயுள்ள ஆனைமலையான்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சுகந்தியை கைது செய்தனர். ஆயுதப்படை காவலர் சுதாகர் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கூடலூர் எல்லை தெருவை சேர்ந்த பாண்டியராஜன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

15 ஆண்டுகால குடும்ப வாழ்க்கை
சாமியை காதல் திருமணம் செய்து கொண்ட சுகந்தி அவருடன் 15 ஆண்டுகளாக வாழ்ந்துள்ளார். சுதாகருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பில், காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications