ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. 18 வயசுகூட இன்னும் முடியல இவங்களுக்கு.. என்ன கொடுமை!
திருவள்ளூர் அருகே கணவன் கண்முன்னே இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.
Recommended Video

திருவள்ளூர்: ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. 18 வயசுகூட இன்னும் முடியல அந்த 2 சிறுவர்களுக்கும். இன்னும் 2 பேரை கூட சேர்த்துக்கிட்டுதான் இந்த அட்டூழியத்தை பண்ணி இருக்காங்க!
கும்மிடிப்பூண்டி பக்கத்துல பாலகிருஷ்ணாபுரம் என்ற பகுதி இருக்கிறது. இங்கு தனது மனைவியுடன் வசித்து வருபவர் முரளி. அவரை கூட்டிக் கொண்டு கோவிலுக்கு போய்விட்டு வீட்டுக்கு பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் கோங்கல் என்ற இடத்தை கடந்துதான் வர வேண்டும். அந்த பகுதியோ அடர்ந்த காட்டுப் பகுதி.

சுருண்டு விழுந்த முரளி
அங்கு வரும்போது, திடீரென 4 பேர் பைக்கை வழிமறித்தார்கள். அதில் 2 பேருக்கு 18 வயசு கூட இன்னும் முடியல. 4 பேரும் சேர்ந்து முரளியை சரமாரியாக தாக்கினார்கள். இதில் பலத்த காயத்துடன் சுருண்டு விழுந்தார் முரளி. பின்னர் அவரது மனைவியை அலேக்காக தூக்கி கொண்டு அருகில் இருந்த புதர் பக்கம் ஓடினார்கள்.

கூட்டாக பலாத்காரம்
அங்கு அந்த பெண்ணை 4 பேரும் சேர்ந்து நாசம் செய்தார்கள். படுகாயங்களுடன் விழுந்து கிடந்த முரளியின் கண் முன்னே இது நடந்ததுதான் கொடுமை. நிலைகுலைந்த முரளி தட்டு தடுமாறி எழுந்து சென்று ஊருக்குள் சென்று ஆட்களை உதவிக்கு அழைத்தார். இதையடுத்து கிராம மக்கள் ஓடிவந்தனர். இதைப்பார்த்த 4 கொடூரர்களும் தப்பி ஆளுக்கொரு பக்கம் தப்பி ஓடினார்கள்.

4 பேர் கைது
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணையை வேகமாக துவக்கியதுடன், கூட்டாக பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேரையும் 5 பிரிவுகளின்கீழ் கைது செய்தனர்.

சிறுவர் சீர்திருத்த பள்ளி
இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நான்கு பேரில் முனியசாமி, மோகன் இருவரும் இப்போது புழலில் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். மீதமுள்ள 18 வயசு கூட முடியாத லட்சுமண, சிவா ஆகியோர் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications