சீரியல் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி விபச்சாரத்தில் தள்ளிய கும்பல் - புரோக்கர் கைது, பெண் மீட்பு
சென்னையில் சொகுசு காரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
Recommended Video

சென்னை: டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி பெண்களை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் சொகுசு காரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட புரோக்கரை கைது செய்த போலீசார், காரில் இருந்த பெண்ணை மீட்டுள்ளனர்.
சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களை ரயில் நிலையத்திலேயே புரோக்கர் கும்பல் மடக்கிவிடுகிறது.

சீரியல் வாய்ப்பு
சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி விபசார தொழிலில் தள்ளி விடுகின்றனர்.

மிரட்டி பணியவைப்பு
புரோக்கர் கும்பலின் மிரட்டலுக்கு பணியும் பெண்களை அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து வருகிறது.

பாலியல் தொழிலாளிகள் கைது
இந்த குற்றவாளிகளை கைது செய்ய பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், ரகசியமாக கண்காணித்து பாலியல் தொழில் தரகர்களை கைது செய்து வருகின்றனர். நேற்று வளசரவாக்கம், பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, மெகாமார்ட் அருகே சொகுசு காரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சொகுசு காரில் பாலியல் தொழில்
சொகுசு காரில் பாலியல் தொழில் நடத்திய ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்த நரேஷ்,23 பீமாவரம் பகுதியை சேர்ந்த ரவி,32 ஆகிய இருவரை கைது செய்தனர். மேற்படி காரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.

காப்பகத்தில் இளம் பெண்
சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட பெண் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்
சென்னைக்கு தனியாக வரும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications