நகை, பணத்தை 'ரிட்டர்ன்' வாங்க... கள்ளக்காதலனை தேடி கணவனுடன் வந்த பெண்!!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தை அடுத்த வெண்டலிகோட்டையை சேர்ந்தவர் ரெதீஷ் (27). பெயிண்டிங் தொழிலாளி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினம் பகுதியில் பெயிண்டிங் வேலைக்கு சென்றார். அங்கு பழக்கமான நண்பரின் உறவுக்காரர் ஒருவரின், 2வது மனைவியுடன் ரெதீசுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்திருக்க முடியாமல் தவித்தனர். இதனால் கணவனைவிட்டு பிரிந்து வந்து ரெதீசை அப்பெண் திருமணமும் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பெண்ணின் நகை, பணத்தை வைத்து உல்லாசமாக ஊர்சுற்றியுள்ளார் ரெதீஷ். 'ஆசை அறுபதுநாள், மோகம் முப்பது நாள்' என்பார்களே அதுபோல சில மாதங்களிலேயே ரெதீசுக்கு அப்பெண்ணுடன் வாழ கசந்தது.
திடீரென ஒருநாள் சொல்லிக்கொள்ளாமல், தனது சொந்த ஊருக்கு 'எஸ்கேப்' ஆகிவிட்டார் ரெதீஷ். அவரது தொலைபேசிக்கு நாகப்பட்டினம் பெண் தொடர்புகொண்டாலும் ரெதீஷ் பேசுவதில்லையாம். ரெதீஷ் கழற்றிவிட்டு ஓடிவிட்டார் என்பதை உணர்ந்த அந்த பெண், தனது கணவனிடமே, சென்று மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த கணவனும், மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டார்.
அதே நேரம் கள்ளக்காதலன் செலவிட்ட நகை, பணத்தை திரும்ப பெற வேண்டும் என்று அப்பெண் தனது கணவனிடம் வலியுறுத்தியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட கணவனும், கள்ளக்காதலனை தேடி பிடிக்க சம்மதித்தார். இதையடுத்து குலசேகரம் வந்த தம்பதிகள், கள்ளக்காதலனின் புகைப்படத்தை பலரிடமும் காண்பித்து, ரெதீஷின் வீட்டை கண்டுபிடித்தனர்.
ரெதீஷின் வீட்டுக்கு சென்ற தம்பதிகள், பணம், நகையை கேட்டு தகராறு செய்துள்ளனர். சண்டை முற்றி கைகலப்பு வரை சென்றதால், அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். குலசேகரம் போலீசார் விரைந்து வந்து காவல் நிலையம் அழைத்து சென்று இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில், கள்ளக்காதலியிடம் இருந்து வாங்கிய நகையை ஒரு வாரத்தில் திருப்பி கொடுப்பதாகவும், பணத்தில் ரூ.50 ஆயிரத்தை உடனடியாக தருவதாகவும் ரெதீஷ் உறுதியளித்தார். கள்ளக்காதலனை தேடி கணவனுடன், பெண் வந்த சம்பவம் குலசேகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications