கணவனை சேர்ந்து வையுங்கள், அல்லது தற்கொலைக்கு அனுமதியுங்கள்: கலெக்டரிடம் பெண் மனு
திருவாரூர்: கணவன் பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த அனிதா (31) கடந்த 2007ம் ஆண்டு சண்முகம் என்பவரை திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ளது. இந்நிலையில், அனிதாவை சண்முகம் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஒரே மகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படும் அனிதா, விரக்தியால், தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்கும்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கலெக்டரிடம் அளித்த மனு:
எனது கணவர் சண்முகம் தற்போது எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதுவரை வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து நன்னிலம் மகளிர் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வயதான தந்தையின் ஆதரவில் வாழ்ந்து வருகிறேன்.
வாழ வழியின்றி நிர்கதியாக இருக்கும் எனக்கும், எனது மகளுக்கும் எதிர்காலம் இருப்பதாக கருதவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எனது மகளின் எதிர்காலம் கருதி கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும். முடியாதபட்சத்தில் என்னையும், என் மகளையும் கருணை கொலை செய்ய வேண்டும் அல்லது தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரனை நேரில் சந்தித்து அனிதா மனு அளித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications