கணவன் மனைவி போல வாழ்ந்து வந்த கள்ளக்காதலர்களிடையே சண்டை.. கத்திக் குத்து!
திருப்பூர்: திருப்பூரில் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்த கள்ளக்காதலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கோபமமடைந்த இளைஞர் அப்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திப் படுகாயப்படுத்தினார்.
திருப்பூர் கோழிப்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி பெயர் தீபலட்சுமி. 30 வயதாகும் இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் வேலுடன் சண்டை போட்டு விட்டு அவரை பிரிந்து தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அங்கு வேலை பார்த்து வரும் 26 வயதான முத்துக்கிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அது கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் ஒரே வீட்டில் வாழவும் தொடங்கினர். இந்த நிலையில் தீபலட்சுமிக்கு இந்தப் புதிய உறவு கசந்துள்ளது. இதனால் முத்துக்கிருஷ்ணனை வீட்டை விட்டு அனுப்பி விட்டார். அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் தீபலட்சுமியிடம் பேச முயற்சித்தார் முத்துக்கிருஷ்ணன். ஆனால் வீட்டுப் பக்கம் கூட வரக் கூடாது என்று அவரை கடுமையாக கண்டித்துள்ளார் தீபலட்சுமி.
இதனால் கோபமடைந்தார் முத்துகிருஷ்ணன். நேற்று இரவு தீபலட்சுமி வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து அவரிடம் சண்டை பிடித்தார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. அதில் முத்துக்கிருஷ்ணன், கத்தியை எடுத்து தீபலட்சுமியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் படுகாயமடைந்து விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துக்கிருஷ்ணனைத் தேடி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications