‘காக்கிச்சட்டை’ மீது தீராக் காதல்... டிக்கெட்டைக் கிழிக்கும் சுமதி அக்கா!
கோவை : கோவையில் அரசு பேருந்தில் பெண் ஒருவர் கண்டக்டராக பணிப் புரிந்து வருகிறார். கோவையில் ஓடும் 420 அரசுப் பேருந்துகளில் இவர் ஒருவர் மட்டுமே பெண் கண்டக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமதி (28). பத்தாவது வரை மட்டுமே படித்துள்ள சுமதிக்கு, திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் முருகேசன் கார்பெண்டராக வேலை பார்த்து வருகிறார்.
சிறு வயது முதலே சுமதிக்கு காக்கி யூனிபார்ம் மீது அதிக ஈடுபாடு உண்டு. எனவே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக கோவை வட்டத்தில் கண்டக்டராக பணிக்கு சேர்ந்தார்.

தடம் எண் 130...
தற்போது தடம் எண் 130ல் உக்கடத்திலிருந்து, காந்திபுரம் செல்லும் மார்க்க பேருந்தில் கண்டக்டராக பணி புரிந்து வருகிறார் சுமதி. மதியம் 12.30க்கு பணிக்கு வரும் சுமதி, இரவு 10 மணிக்கு வீட்டிற்கு புறப்படுகிறார்.

அக்கா...
பெண் ஒருவர் கண்டக்டராக இருப்பதால், பெண் பயணிகள் அதிக பிரியத்துடன் சுமதியுடன் பழகி வருகின்றனராம். வயதில் குறைந்த பயணிகள் சுமதியை அக்கா என்றே பாசத்துடன் அழைக்கிறார்களாம்.

நிறைவான பணி...
பணியிடத்தில் தான் கண்ணியமாக நடத்தப்படுவதாக பெருமையுடன் கூறுகிறார் சுமதி. அதனால், தன்னுடைய பணியை மனநிறைவுடன் செய்ய இயலுவதாகவும் அவர் கூறுகிறார்.

சாதனைப் பெண்கள் தான்...
சுமதியைப் போலவே தமிழகத்தின் வேறு சில பகுதிகளிலும் பெண் கண்டக்டர்கள் பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications