பலபேருடன் தொடர்பு... குழந்தைகளுடன் உயிரை விட்ட பேபிஷாலினி - கள்ளக்காதலன் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண், குழந்தைகள் குழந்தைகள் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. கொலை செய்ய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி: கணவன் கடலுக்குள் மீன் பிடி தொழிலுக்கு போன நேரத்தில் கள்ளகாதலனால் கொலை செய்யப்பட்டுள்ளார் குமரி மாவட்டத்தில் பெண் ஒருவர். கூடவே இரண்டு குழந்தைகளையும் கொன்று தண்ணீரில் வீசியுள்ளால் அந்த கொடூரன். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலையான பெண்ணின் பெயர் பேபி ஷாலினி என்பதாகும். இவருக்கு சங்கீதா என்ற பெயரும் உண்டு.
குமரி மாவட்டம் நித்திரவிளையை அடுத்த வள்ளவிளை ததேயுபுரத்தை சேர்ந்தவர் விஜயதாசன் என்பவரின் மனைவியாவார்.

விஜயதாசன் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு சஞ்சய்,7, பியூ போபர்,5 என்ற இரண்டு மகன்கள். இவர்கள் நித்திரவிளை அருகே காஞ்சாம்புறத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த 15 தினங்களுக்கு முன்பு விஜயதாசன் கேரளா சென்றார். கடந்த 26ம் தேதி காலை பேபி ஷாலினியும், 2 குழந்தைகளும் கணபதியான்கடவு பாலம் அருகே தாமிரபரணி ஆற்றில் சடலமாக மிதந்தனர்.
சம்பவம் குறித்து பேபி ஷாலினியின் தந்தை மார்ட்டின் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பிரேத பரிசோதனையில் 3 பேரும் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து மர்மச்சாவு என இருந்த இந்த வழக்கை கொலையாக மாற்றப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
ஷாலினியின் கணவரின் நெருங்கிய உறவினர்கள், பேபி ஷாலினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என பலரிடம் விசாரணை நடந்தது. சந்தேகத்தின்பேரில் ஹோமியோபதி டாக்டர் மற்றும் இனயம் புத்தன்துறையை சேர்ந்த கலையரசன் ஆகியோரை தனிப்படை போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.
கலையரசனிடம் நடத்திய விசாரணையில், அவர் 3 பேரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலம் போலீசார் வட்டாரத்திலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெளிநாட்டில் வேலை செய்து வந்த கலையரசன் ஊருக்கு திரும்பிய பின்னர் பேபி ஷாலினியுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். பேபி ஷாலினியையும், குழந்தைகளையும் அடிக்கடி வெளியே அழைத்து செல்வதும் உண்டு.
அதுபோல அருகில் மருத்துவமனை நடத்தி வரும் ஹோமியோபதி டாக்டருடனும் பேபி ஷாலினிக்கு தொடர்பு ஏற்பட்டது. இதை கலையரசன் கண்டிக்கவே, அதை ஷாலினி கேட்கவில்லையாம்.
பேபி ஷாலினியுடன் கலையரசன் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஷெல்பி படங்களை அவரது நண்பனான கிளிண்டன் பார்த்து விட்டு ஷாலினியிடம் கூறி மிரட்டியுள்ளார். அவரை மிரட்டி தன்னுடன் உல்லாசத்துக்கு அழைத்துள்ளார்.
இதை பேபி ஷாலினி கலையரசனிடம் கூறினார். திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினாராம். கடந்த 25ம் தேதி இரவு ஷாலினி வீட்டிற்கு சென்ற கலையரசன் ஜாலியாக பேசிக்கொண்டிருந்த போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பேபி ஷாலினி மீண்டும் வற்புறுத்தவே, இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.
பேபி ஷாலினியின் துப்பட்டாவால் அவர் கழுத்தை நெரித்து அவரை துடிக்க துடிக்க கொன்று மறைத்து வைத்த. 26ஆம் தேதி அதிகாலை சடலத்தை தாமிரபரணி ஆற்று பகுதிக்கு கொண்டு சென்று தண்ணீரில் வீசியுள்ளார்.
பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து குழந்தைகளை அழைத்து சென்று தாமிரபரணி ஆற்றின் ஆழமான பகுதியில் இருவரையும் தண்ணீரில் வீசி கொன்று விட்டு திரும்பிவிட்டதாக கூறினார் கலையரசன்.
இந்த கொலைகளை போலீசாரால் கண்டு பிடிக்க முடியாது என நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை நெருங்கி உண்மையை கண்டுபிடித்து விட்டனர் என்று கூறியுள்ளார். ஒரு பெண்ணின் தவறான தொடர்பினால் உயிரை இழந்ததோடு இரண்டு அப்பாவி குழந்தைகளின் உயிரும் போய்விட்டது. இந்த சம்பவம் நித்திரவிளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications