கடலூர் அருகே டாஸ்மாக் கடையை துவம்சம் செய்த பெண்கள்!
கடலூர் மாவட்டத்தில் அன்னதானம்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களே அக்கடையை அடித்து நொறுக்கினர்.
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள அன்னதானம்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களே அக்கடையை அடித்து நொறுக்கினர்.
தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அவ்வப்போது பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் தங்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற ஆங்காங்கே எதிர்ப்பு வலுத்து வருகிறது.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் உள்ள அன்னதானம்பேட்டையில் டாஸ்மாக் கடை மாணவர்களுக்கும், பெண்களுக்கும் இடையூறாக உள்ளதாக அதை அகற்றக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை அந்தக் கடையை அடித்து நொறுக்கினர். மேலும் மதுபான பாட்டில்களையும் உடைத்தெறிந்தனர்.
எனினும் ஆத்திரம் அடங்காததால் குறிஞ்சிப்பாடி நடுவீரம்பட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸாரும், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் ஜான்சிராணியும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலையவில்லை.
இன்னும் 20 நாட்களுக்குள் டாஸ்மாக் கடைடை அகற்றுவதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் கடையை அகற்றாவிட்டால் மீண்டு்ம போராட்டம் வெடிக்கும் என்ற எச்சரிக்கையையும் பொதுமக்கள் விடுத்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications