ஜெயலலிதா செத்துப்போயிட்டா... ஏக வசனத்தில் பேசினார் அமைச்சர் சரோஜா- மீனாட்சி பரபரப்பு பேட்டி
சென்னைக்கு இடமாறுதல் கேட்ட சமூக நலத்துறை பெண் அதிகாரியிடம் ரூ. 30 லட்சம் லஞ்சம் கேட்ட அமைச்சர் சரோஜா, ஜெயலலிதா, சசிகலாவை அவள், இவள் என்று ஒருமையில் பேசியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா உயிரோடு இருந்தவரைக்கும் அம்மா என்று காலில் விழுந்து தெய்வமே என்று கும்பிட்ட அமைச்சர் சரோஜா, இன்று அவள் செத்துப்போயிட்டாள் என்று ஒருமையில் திட்டியதாக சமூக நலத்துறை அதிகாரி அளித்த பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழக அமைச்சர்களுக்கு இது போதாத காலம்போல வரிசையாக சிக்குகிறார். இப்போது சிக்கியிருப்பது சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா.

ரூ.30 லட்சம் லஞ்சம்
ஜெயலலிதாவினால் நேரடியாக பணியில் நியமிக்கப்பட்டவர் மீனாட்சி, அவரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக சம்பந்தப்பட்ட மீனாட்சியே புகார் அளித்துள்ளதார். தருமபுரியில் இருந்து சென்னைக்கு இடமாறுதல் கேட்ட மீனாட்சியை தனது வீட்டிற்கு நேரடியாக வரவழைத்து ரூ.20 லட்சம் கேட்டுள்ளதால் இதுதான் தற்போது பூதாகரமாகியுள்ளது,

அவள், இவள் என்று பேசினாரா?
மீனாட்சியை நேரில் வரவழைத்த அமைச்சர் சரோஜா, உனது அப்பா ஜெயலலிதாவின் நண்பராக இருக்கலாம், அதெல்லாம் அந்தக்காலம், இப்போது சீனியர் அமைச்சர்கள் யாருமில்லை. உனது ஜெயலலிதாவோ செத்து தொலைந்து விட்டாள், இன்னொருத்தி பெங்களூரு ஜெயிலுக்கு போயிட்டா, அடுத்தவன் திகாரில் இருக்கிறான் என்று கூறியதாக பரபரப்பு பேட்டியளித்துள்ளார் மீனாட்சி.

4000 கோடி சம்பாதிக்கணும்
இன்னும் 4 வருஷத்துல நான் ரூ. 4000 கோடி சம்பாதிக்கணும் என்றும் அதுவரை என் பணவெறி அடங்காது என்று மீனாட்சியிடம் கூறினாராம். உன்னால் ரூ. 20 லட்சம் தர முடியாது என்றால் விட்டு விட்டு போய் விடு என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார் என்றும் மீனாட்சி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

அப்போ எல்லாம் நடிப்பா?
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை காலில் விழுந்தும், அவரது கார் டயரை தொட்டும் கும்பிட்டனர் அமைச்சர்கள், பெண் அமைச்சர்களோ ஜெயலலிதாவை கடவுளாக பாவித்து வணங்கி வந்தனர். அவர் சிறையில் இருந்த போதும், உடல் நலக்குறைவோடு இருந்த போதும் மண் சோறு சாப்பிட்டனர், தீச்சட்டி ஏந்தினர். இப்போது அமைச்சர் சரோஜா, அவள், இவள் என்று ஏக வசனத்தில் ஜெயலலிதாவை பேசியதாக தனது பேட்டியில் கூறியுள்ளார் மீனாட்சி. அப்போ அம்மா, சின்னம்மான்னு சொன்னதெல்லாம் நடிப்பா அமைச்சர்களே?
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications