வேண்டாம் வேண்டாம் டாஸ்மாக் வேண்டாம் - கோவில்பட்டியில் பெண்கள் முற்றுகை
கோவில்பட்டி பகுதியில் மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி: கோவில்பட்டி பகுதியில் மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் செயல்பட்டு வந்த 16 டாஸ்மாக் கடைகள் கோர்ட் உத்தரவுப்படி மூடப்பட்டன. இதனால் மூடப்பட்ட கடைகளை வேறு இடத்தில் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் இடம் தேடி வருகிறது. இருப்பினும் ஊருக்குள் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என பெண்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தற்போது கோவில்பட்டியில் கடையூர் ரோடு, பாண்டவர்மங்கலம், மந்தி தோப்பு பகுதி என மொத்தம் 3 கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் இந்த வழியாக பீதியுடன் செல்கின்றனர்.
குடிமகன்கள் இரு சக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி விட்டு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குடிமகன்களின் இடையூரால் அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மந்திப்தோப்பு பகுதி டாஸ்மாக் கடையை மூடகோரி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஊர்வலமாக சென்று கடையை முற்றுகையிட்டனர். பின்னர் அனைவரும் கடை முன்பு அமர்ந்து கோஷம் எழுப்பினர்.
இந்த தகவல் கிடைத்த போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications