சிம்பு, அனிருத்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் கலைச்செல்வி.

சென்னை யை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் மாநிலதலைவி கலைச்செல்வி சென்னை காவல் துறை ஆணையர் ராஜேந்திரனிடம் இன்று புகார் ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில் திரைப்பட துறையை சேர்ந்த சிம்பு, அனிருத் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும், தமிழகத்தில் சமிபகாலமாக வெளியாகும் திரைப்படங்களில் பொது அமைதியை கெடுக்கும் வண்ணம் திரைக்கதை,வசனம்,கதை,பாடல்கள்,நடிப்பு உள்ளிட்டவைகள் அமைக்கப் பட்டு வருகின்றன என்றும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications