ரஜினி மக்கள் மகளிர் மன்றத்திற்கு திருச்சி மலைக்கோட்டையில் பிள்ளையார் சுழி!
தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சியில் ரஜினி மக்கள் மகளிர் மன்றம் துவக்கப்பட்டுள்ளது. இதில் சேர பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சென்னை : தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி தாராநல்லூர் கல்மந்தை காலனியில் ரஜினி மக்கள் மகளிர் மன்றம் என்ற பெயரில் ரஜினியின் மகளிர் அணி துவங்கப்பட்டுள்ளது. இதில் சேர்வதற்கு பெண்கள் மத்தியில் ஆர்வம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக டிசம்பர் மாதம் 31-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமானார்கள். அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த கையோடு ரசிகர் மன்றத்தை ஒருங்கிணைக்கும் பணியையும் ரஜினி தொடங்கினார். ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக பெயர் மாற்றம் பெற்றது.
உறுப்பினர்களை சேர்ப்பதற்காக இணையதளம் மற்றும் செயலியையும் ரஜினி அறிமுகம் செய்தார். எனினும் நேரடியாக மக்களை சந்திக்க வசதியாக ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகளை நியமித்து, உறுப்பினர்களை சேர்க்கும பணியானது தொடங்கியுள்ளது. இதற்காக 10 பேர் கொண்ட குழு தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து ரசிகர் மன்றத்தினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறது.

ரஜினி மக்கள் மகளிர் மன்றம்
இந்நிலையில் திருச்சி தாராநல்லூர் கல்மந்தை காலணியில் ரஜினி மக்கள் மகளிர் மன்றம் என்ற பெயரில் முதன்முதலாக மகளிர் அணி துவங்கப்பட்டுள்ளது. இந்த மன்றம் துங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்வத்துடன் மன்றத்தில் சேர்ந்து வருகின்றனர்.

ஆர்வம் காட்டும் பெண்கள்
புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்து மகளிர் தங்களை இந்த மன்றத்தில் இணைத்துக் கொண்டனர். தமிழகத்தின் அனைத்து பிரச்னைகளையும் ரஜினி தீர்த்து வைப்பார் என்றும் அந்தப் பெண்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விரைவில் அனைத்து மாவட்டங்களிலும்
திருச்சி மாவட்டத்தில் மட்டும் இதுவரை ரஜினி மக்கள் மன்றத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இந்நிலையில் மகளிருக்கென தனியாக தொடங்கப்பட்டுள்ள மகளிர் மக்கள் மன்றம் மற்ற மாவட்டங்களிலும் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

பெண் நிர்வாகிகளை நியமிக்கவும் முடிவு
ரஜினி கட்சியின் பிரச்சாரத்தை பெண்கள் மூலமாக தீவிரப்படுத்தும் நோக்கிலேயே மகளிர் மன்றங்கள் அமைக்கப்படுவதாக தெரிகிறது. மேலும் மாநில, மாவட்ட அளவில் மகளிர் அணிக்கு ரஜினி கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications