தண்ணீர்.. தண்ணீர்.. காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.. விழுப்புரத்தில் போக்குவரத்து பாதிப்பு
தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. குடிக்கக் கூட தண்ணீர் இல்லாததால் பெண்கள் விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
விழுப்புரம்: கொளுத்தி எடுக்கும் கோடை வெயிலில் தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது.
கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாமல் தமிழகத்தின் முக்கிய ஏரிகள் அனைத்து காய்ந்து கிடக்கின்றன. கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் பஞ்சம் தமிழக மக்களை தற்போது பாடாய் படுத்தி வருகிறது.
இதனால் பொதுமக்கள் காலிக் குடங்களோடு சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காத மக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது.

சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டத்தில் கூத்தக்குடி கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடும் கோபம் அடைந்த பெண்கள் காலிக் குடங்களுடன் கள்ளக்குறிச்சி-வேம்பூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் யாரும் வந்து ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. போராட்டம் தீவிரம் அடைந்ததையடுத்து அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

காலிக் குடங்களுடன்...
இதே போன்று திருவாரூர் மாவட்டத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் பெரம்பூரில் பகுதியில் ஒன்று கூடிய மக்கள் குடிநீர் கேட்டு தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தினார்கள்.

மறியல்
சென்னையை அடுத்த திருவள்ளுர் மாவட்டத்திலும் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் சரியாக இல்லை. இதனால் இன்று திருவள்ளூர் மாவட்டம் கிராண்ட்லைன் ஊராட்சி மக்கள் காலிக்குடங்களுடன் மறியல் செய்தனர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications