சட்டசபை தேர்தலில் ஆண்களை விட 4 லட்சம் பெண்கள் அதிகம் ஓட்டு போட்டிருக்காங்களாம்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் ஓட்டுப்போட்டனர். இதில் ஆண்களை விட 4 லட்சம் பெண்கள் கூடுதலாக வாக்களித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் 5 கோடியே 77 லட்சத்து 33 ஆயிரத்து 574 பேர். இவர்களில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்தனர். இதில் ஆண்கள் 2 கோடியே 12 லட்சத்து 44 ஆயிரத்து 129 பேரும், பெண்கள் 2 கோடியே 16 லட்சத்து 28 ஆயிரத்து 807 பேரும் ஆவார்கள். இந்த தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிகம் பேர் வாக்களித்துள்ளனர்.

தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலில், ஆண்களை விட, 10 ஆயிரம் பெண்கள் கூடுதலாக ஓட்டளித்தனர். 2014 லோக்சபா தேர்தலில், ஆண்களை விட, ஒரு லட்சம் பெண்கள் கூடுதலாக ஓட்டு போட்டனர்.
இந்த சட்டசபை தேர்தலில், ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்கள் அதிகம். எனவே, பெண் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், பெண்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டளித்தனர்.
ஆண்களை விட, 4 லட்சம் பெண்கள் கூடுதலாக ஓட்டளித்து உள்ளனர். ஆண்களை விட, பெண்களின் ஓட்டுப்பதிவு அதிகமாக இருப்பது, எந்த கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற விவாதமும் எழுந்துள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications