நீங்க பயப்படாதீங்க, நாங்க இருக்கோம்.. பெண்களின் எழுச்சி வரவேற்பில் திக்குமுக்காடிபோன தினகரன்- வீடியோ
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு பெண்கள் அமோக ஆதரவு அளிப்பதை போன்ற ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தினகரன் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளார்.
தினகரன் காரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இப்படி பிரசாரத்திற்கு செல்லும்போது அவருடன் சென்ற உதவியாளர் காருக்குள் இருந்தபடி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார்.

ஆதரவு அமோகம்
தினகரன் தரப்பு எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் தினகரனுக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதாக காட்சிகள் உள்ளன. கடந்த தேர்தலை விட இம்முறை ஆர்.கே.நகரில் தினகரனுக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிட காரணம்
இந்த நிலையில், தினகரன் பிரச்சார வீடியோவும் அதையே எதிரொலிக்கிறது. "அம்மா தொகுதி நல்லா இருக்கனும் என்ற நோக்கத்தில் நாங்கள் நிற்கிறோம்" என்கிறார் டிடிவி தினகரன்.

காரில் வராதீங்க
அதற்கு ஒரு பெண்மணியோ, "நீங்கள் ஓட்டு கேட்டு வர காரில் வரக்கூடாது. நடந்து வரனும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வாங்க. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீ பயப்படாத, ஏன் பயப்படுற, நாங்க இருக்கிறோம்" என்று பூரிப்போடு சொல்கிறார்.

தலைவா, தங்கமே
"நீங்கதான் வர வேண்டும்" என்று பெண் கோஷமிட, ஒரு ஆணோ, "தலைவா, என் தங்கமே" என கை கொடுத்து புல்லரிக்க வைக்கிறார். இதை பார்த்த தினகரனுக்கு இயல்பைவிட அதிகமாகவே முகத்தில் சிரிப்பு.

மிரட்டியே வாங்குவேன்
"நீங்க ஜெயிக்க வைங்க, நான் மிரட்டியே எல்லாவற்றையும் வாங்கி தருகிறேன்" என்று காரில் இருந்தபடியே தினகரன் கறாராக கூற, "மறக்காம போட்டுறுவோம், போண்ணா, நாங்க உங்களுக்குத்தான் ஓட்டு போடுவோம்" என்று தெருவில் வரிசை கட்டி நிற்கும் ஆண்கள் சிலர் உற்சாக குரல் எழுப்புகிறார்கள்.

சென்டிமென்ட்டும் உண்டு
இப்படி ஒருபக்கம் ஆக்ஷன் காட்சிகள் அரங்கேறியபோது, திடீர் திருப்பமாக, "உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்" என்று ஒரு தொண்டருக்கு தினகரன் அன்பு கட்டளையிடும் நெகிழ்ச்சி காட்சியும் இந்த வீடியோவில் இடம் பிடித்துள்ளது. ஆர்.கே.நகரில் தினகரன் 'வழக்கமான பாணியில்' ஓட்டுவேட்டையாடும் திறமையை பார்த்து ஆளும் கட்சி வாயடைத்துப்போயுள்ளதாம்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications