For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனை... கும்மாங்குத்து குத்திய பெண் காவல் அதிகாரி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மல்யுத்த போட்டி என்பது ஆக்ரோஷமாக இருக்கும். களத்தில் ஒருவருக்கொருவர் படு பயங்கரமாக மோதிக்கொள்வார்கள். தன்னுடன் மோதி ஜெயிக்க முடியுமா என்று சவால் விட்ட வீராங்கனையை கும்மாங்குத்து குத்தி தோற்கடித்துள்ளார் முன்னாள் காவல்துறை அதிகாரி கவிதா.

ஹரியானா மாநிலத்தில் மல்யுத்த போட்டிக்காக நடந்த காட்சி போட்டியில், தன்னை யாராவது வீழ்த்த முடியுமா? என்று சவால் விட்டார் அந்த மல்யுத்த வீராங்கனை. அப்போது களத்தில் குதித்தார் மஞ்சள் நிற சுடிதார் அணிந்த பெண்.

கவிதா என்ற அந்த பெண் முன்னாள் காவல்துறை அதிகரியாம். இவர் பளு தூக்கும் வீராங்கனையும் ஆவர். களத்தில் இறங்கிய கவிதாவை பிடித்து தள்ளிவிட்டார் அந்த மல்யுத்த வீராங்கனை இதனால் ஆத்திமடைந்த கவிதா, அந்த வீராங்கனையை முட்டி மோடி, சும்மா குத்து குத்து என்று குத்தினார்.

அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து விலக்கினார்கள். ஆனாலும் இருவரும் ஆக்ரோஷமாகவே இருந்தனர். அடுத்த ரவுண்டு ஆரம்பமாக, மீண்டும் மல்யுத்த வீராங்கனையை முட்டி மோதி வீழ்த்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

English summary
The Video has gone viral on social media, a woman clad in a yellow salwar-kameez accepts an open challenge thrown by a professional wrestler during an event held by Continental Wrestling Entertainment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X