சிவகாசி வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை: 40 அறைகள் தரைமட்டம்
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இதில் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தினால் அந்த பட்டாசு தொழிற்சாலையில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இதில் அந்த தொழிற்சாலையின் 40க்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்துள்ளன.
இந்த பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் பணி முடிந்து வீடு திரும்பிவிட்டதால், உயிர் சேதம் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

ஒரு அறையில் ஏற்பட்ட வெடி விபத்தினால் ஏற்பட்ட தீ பொறி மற்ற அறைகள் மீது விழுந்ததால் ஒரே நேரத்தில் 20 அறைகள் தரைமட்டம் ஆனது.
தொடர்ந்து இரண்டாவது நளாக இன்றும் ஆலையில் தொடர்ந்து பட்டாசுக்கள் வெடித்ததால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பட்டாசு ஆலையின் அனைத்து அறைகளும் இடிந்து தரைமட்டமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications