"கலகலவென சிரி... கண்ணில் நீர் வர சிரி'... இன்று உலக சிரிப்பு தினம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை : ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஞாயிறு உலக சிரிப்பு தினமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. ஆனால், இந்த இயந்திர உலகில் நமக்கும் சிரிக்க நேரமில்லை, மற்றவர்களைச் சிரிக்க வைக்கவும் நேரமில்லை.
எனவே, ஆண்டுதோறும் உலக சிரிப்பு தினம் என்ற ஒன்று கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் முடிந்தளவு மக்கள் ஆங்காங்கே ஒன்றாகக் கூடி சிரித்து, களித்து மகிழ்கிறார்கள்.

- கடந்த 1998ம் ஆண்டு உலக சிரிப்பு தினத்தை (World Laughter Day) இந்தியாவை சேர்ந்த டாக்டர் மதன் கதாரியா (Dr. Madan Kataria) என்பவர் உருவாக்கினர்.
- இவர் மும்பையை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் 'லாப்டர் யோகா' இயக்கத்தை (Laughter Yoga Moveement) தொடங்கியவர்.
- மதம், இனம் தாண்டி, லாப நோக்கம் எதுவும் இன்றி இத்தினம் சந்தோஷமாக கொண்டாடப்படுகிறது.
- முதல் உலக சிரிப்பு தின கொண்டாட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில் ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்தனர்.
- 2000ம் ஆண்டு இந்தியாவுக்கு வெளியே முதல் உலக சிரிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
- அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் லாப்டர் கிளப்கள் உருவாக்கப்பட்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6000-க்கும் மேற்பட்ட கிளப்கள் இருக்கின்றன.
- இத்தினத்தில் இந்தியாவில் லாப்டர் கிளப்பை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக போய் கொண்டாடுகிறார்கள்.அப்போது, 'சிரிப்பு மூலம் உலக அமைதி', வாழ்க்கைக்காக சிரிப்பு, அன்பும் சிரிப்பும், சிரிப்புக்கு மொழி இல்லை, சிரிப்பு ஒரு உலக மொழி,ஹோ ஹோ ஹா ஹா, சிரிப்பு & ஒரு பாசிடிவ் சக்தி, போன்ற பேனர்களுடன் செல்கிறார்கள்.
- சிறப்பாக சிரிக்கும் சிறுவர்-சிறுமிகள்,பெண்கள்,வயதானவர்களுக்கு பரிசும் வழங்கப் படுகிறது.
- சிரிப்பு ஒரு சிறந்த மருந்து என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சிரிக்கும் போது, முழு உடலுக்கும் நன்மை விளைகிறது. நுரையீரலுக்கு பயிற்சி கிடைக்கிறது. உமிழ்நீரில் கிருமிகளை எதிர்க்கும் ஆண்ட்டிபாடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வயிற்றில் அல்சர் வருவதை தடுக்கும் என்சைம்மைச் சுரக்க செய்கிறது. வலிபோக்கும் நிவாரணியான என்டார்ஃபின்சையும் சுரக்கச் செய்கிறது என பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
- சிறு குழந்தைகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 300-400 தடவைகள் சிரிக்கின்றன. 150 தடவைகள் கலகலவென சிரிக்கின்றன.ஆனால்,வயதாக வயதாக இது 6 தடவையாக சுருங்கி விடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
- மற்ற உறுப்புகள் சரிவர இயங்க உடற்பயிற்சி எப்படி முக்கியமோ அதைப் போலவே சிரிப்பு மூலம் உள் உறுப்புகளை வலிமையாக்க முடியும் என அவர்கள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
- தினமும் அரை மணி நேரம் சிரித்தால் மாரடைப்புக்கு காரணமான மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பும்,அவற்றின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
- அதேபோல், மனம் மற்றும் வாய்விட்டு சிரிப்பது மூலம் உடலில் தேங்கி இருக்கும் தேவையற்றை கொழுப்பு கரைகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
- நாமும் சிரித்து, மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வோம் என இந்நாளில் சபதம் எடுத்துக் கொள்வோமாக...
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications