அட.. பல்லு தேய்க்க ஆரம்பிச்சு.. குட் நைட் சொல்ற வரைக்கும் டெய்லி செல்ஃபிதாம்மா #worldselfieday
Recommended Video

சென்னை: அட என்னப்பா செல்ஃபி டே வாமே இன்னைக்கு.. ம்.. நமக்கெல்லாம் எல்லா நாளும் செல்ஃபி டே தாங்க. தூங்கி முழிச்சதும் அரைத் தூக்கத்துல "ஆய்னு" கண்ணை சுருக்கி ஒரு செல்ஃபி எடுத்தால் தான் அந்த நாளே விடிஞ்சா மாதிரிங்க. அட எனக்கு மட்டும் இல்லங்க, இப்போ இருக்குற இளசுல இருந்து பெரிசு வர செல்ஃபி மோகம் இல்லாதவங்களை விரல்விட்டு எண்ணிடலாம்.
செல்ஃபி எடுக்க பல டெக்னிக்குகள் இருக்குங்க. நம்ம முகத்தை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்குற மாறி இருக்கவே கூடாதுங்க. இதுதான் முதல் ரூல்ஸுங்க. அப்பறம் முகத்தை "கொய்"னு கோணலா வச்சுக்கணும். வாயை நல்லா கோணலா வச்சீங்கன்னா நீங்க அதுல எக்ஸ்பர்ட் ஆயிட்டீங்கன்னு அர்த்தம். அது ஒரு போஸ்.
பிறகு நாக்கை வெளில நீட்டிக்கணும் (அது லெப்ட்டுக்கா இருந்தாலும் சரி, ரைட்டுக்கா இருந்தாலும் சரி, இல்லாட்டி நடுவால நீட்டினாலும் சரி), இப்படி நிறைய இருக்குங்க. ஆனா நேரா மட்டும் நின்னு எடுக்காதிங்க. அதுக்குப் பேரு செல்ஃபியே கிடையாது.. செல் போனே உங்களைக் காரித் துப்பிடும்.

எங்கு பார்த்தாலும் செல்ஃபி
எங்கெல்லாம் செல்ஃபி எடுக்கலாம்னு பாத்தீங்கன்னா அதுக்கு பெருசா அலட்டிக்கெல்லாம் தேவையில்லைங்க. இடம் தேடி அலையவும் தேவையில்லைங்க. பல் துலக்குறதுல ஆரம்பிச்சிடுங்க.. அப்படியே இட்லி சாப்பிடும்போது, டீ குடிக்கும்போது, மத்தியானம் லன்ச் சாப்பிடும்போது, கூட்டமாக வெளியில் ரவுண்டடிக்கப் போகும் போது, பஸ், மெட்ரோ, ரயில் பயணங்களின் போது.. இப்படியே போகலாம்ங்க நம்ம பாட்டுக்கு ஜாலியா.

இதுக்கே ஆச்சரியமானா எப்படி
அட இதுக்கே ஆச்சர்யமா பார்த்தா எப்படி,,, இப்போ நீங்க பஸ்ல ஸ்கூல் இல்லனா காலேஜ் அட வேலைக்கு போறவங்க யாரையாச்சும் பாருங்க,
கண்டிப்பா செல்ஃபி எடுத்துட்டு இருப்பாங்க. இங்குதான் என்றில்லை.. எங்கு பார்த்தாலும் செல்ஃபி பிரதர் மற்றும் சிஸ்டர்களை நிறையப் பார்க்கலாம்.

இப்பெல்லாம் டப்ஸ்மாஷ்தான்
முன்னாடி செல்ஃபி பிரபலம், பிறகு குரூப்பி வந்தது. அதாவது கும்பலா நின்னு ஹோன்னு கத்தியபடி எடுப்பது. நீட்டமா குச்சி வச்சிட்டு எடுப்பாங்களே அதுதான்.. இப்ப நடிக்க வேற ஆரம்பிச்சுட்டாங்க நம்ம மக்கள். டப்ஷ்மாஷ், ம்யூசிக்கலி, அப்படி அப்பிளிக்கேஷன் மூலமா அவங்க மொபைல் போன்ல போற இடமெல்லாம் தனியாகவோ இல்ல அவங்க நட்பு வட்டாரத்தோட பண்ற கூத்து இருக்கு அது தனிக்கதை.
சித்ரா ஆன்ட்டி!
அதுவும் அந்த சித்ரா ஆண்ட்டி கொடுக்கிற டார்ச்சர் இருக்கே.. அப்பப்பா.. அம்மம்மா.. முடியலைங்க முடியலை. சரி செய்தியை படிச்சதோடு நில்லாம, ஜாலியா ஒரு செல்ஃபி எடுத்து இந்த செய்தியையும், உங்க செல்ஃபியையும் ஷேர் பண்ணுங்க.. ஓகேவா.
- திவ்யபாலா
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications