உலக யோகா தினம்.... வி மிஸ் யூ "கேப்டன்"! #internationalyogaday

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தாண்டு யோகா தினத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்காதது அவரது கட்சியினருக்கும் மற்றவர்களுக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா அறிவித்து, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமான கொண்டாடப்பட்டு வருகிறது.

World Yoga Day: DMDK chief Vijayakanth not participated

உடல் நலம் பெற யோகா கலை அவசியம் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்குவதே இந்த தினத்தின் நோக்கமாகும். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஆண்டு என்பதால் பெரும்பாலான பிரபலங்கள் யோகா செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதில் விஜயகாந்த்தும் ஒருவர். மோடி செய்த யோகாவை விட விஜயகாந்த் யோகா பிரபலமானது.

மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் மற்றும் கட்சியினர் புடை சூழ அவர் செய்த யோகா அனைவரையும் கவர்ந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டும் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செய்யவில்லை. சரி இந்த ஆண்டாவது அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை.

அதே சமயம் நேற்று தேமுதிக சார்பில் நடந்த இப்தார் விருந்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு வழக்கம் போல பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
World yoga day celebrated today. But today all we missed the yoga poses of vijayakanth when he was done in 2015.
Please Wait while comments are loading...