ரஷ்யாவில் படிக்க ஆசையா... அப்போ இந்தச் செய்தி உங்களுக்கு உதவியாக இருக்கும்
சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது.அதில் 12 முன்னணி ரஷ்ய அரசின் கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
சென்னை: சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் இம்மாதம் 13 மற்றும் 14 தேதிகளில் ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது.இதில் மருத்துவம், பொறியியல் மற்றும் ஏவியேஷன் கல்வியைக் கற்பிக்கும் 12 முன்னணி ரஷ்ய அரசு கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்த இலவசக் கண்காட்சி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்குறிப்பிட்ட இரண்டு நாளிலும் நடைபெறும். இக்கண்காட்சி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தென்னிந்திய ரஷ்ய தூதரகத்தின் துணைத் தூதர் யூரி எஸ். பெலொவ் மற்றும் ரஷ்ய கலாச்சார மையத்தின் இயக்குனர் மைக்கேல் ஜே. கோர்படோவ் ஆகியோர் கூறுகையில், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை சமர்பிக்கும் மாணவர்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைக் கடிதம் இக்கண்காட்சியிலேயே வழங்கப்படும்.

பொறியியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்பட ரஷ்ய கல்வி நிறுவனங்களில் அதிக சலுகை கட்டணங்களில் அளிக்கப்படும் படிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்தக் கண்காட்சியின் நோக்கம். இம்முறை ரஷ்யாவின் பல்வேறு மருத்துவ கல்வி நிலையங்கள் 500 மருத்துவ இடங்களை கல்வி கட்டண சலுகையுடன் இந்திய மாணவர்களுக்கு வழங்க உள்ளன.
மதுரையிலும் ரஷ்ய கல்விக் கண்காட்சி
சென்னையைத் தொடர்ந்து, மே 15ம் தேதி அன்று மதுரையில் உள்ள ஹோட்டல் ராயல் கோர்ட்டில் ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறும். தமிழ் வழி பயின்ற மாணவர்களும் ரஷ்யாவில் படிக்க விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகள் மற்றும் கண்காட்சி குறித்த கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள 92822 21221 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications