சிங்கப்பூரில் இலவச மருத்துவமா? ரூ.1 கோடி சவாலுக்கு ரெடியா? விஜய்க்கு கோவை மாணவர்கள் சவால் #Mersal
Recommended Video

கோவை: மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்ற வசனத்தை போல சிங்கப்பூரில் இலவச மருத்துவம் வழங்கப்படுவதை நிரூபிக்க முடியாவிட்டால் நடிகர் ரூ.1 கோடி தர வேண்டும் என்று கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர் சவால் விடுத்துள்ளனர்.
தேனான்டாள் நிறுவன தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியையொட்டி வெளியான மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்ற ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்கள் தமிழக பாஜக தலைவர்களை கோபப்படுத்தின.
தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்றர ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகளில் பொய்யான புள்ளி விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக கண்டனம் தெரிவித்து, அந்த காட்சிகளை நீக்க கோரிக்கை விடுத்தனர்.

கண்டன குரல்கள்
பாஜக தலைவர்கள் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுகிறார்கள் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்தனர். சென்சார் செய்யப்பட்ட படத்தை மறுபடியும் தணிக்கை செய்வது தப்பான முன்னுதாரணமாகிவிடும் என்று கமல் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்களும், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் தெரிவித்தனர்.

சட்டக் கல்லூரி மாணவர்கள்
இந்த நிலையில், கோவையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர், காவல்துறையிடம், மெர்சல் படம் குறித்து ஒரு புகார் மனுவை அளித்தனர். அதில், படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய் ஆகியோருக்கு 1 கோடி கேட்டு சவால் விடுத்துள்ளனர்.

ரூ.1 கோடி கேட்டு சவால்
படத்தில் இடம் பெற்ற காட்சியில் 7 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கும், சிங்கப்பூரில் இலவச மருத்துவம் அளிக்கப்படுவதாகவும், 28 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கும் இந்தியாவில் ஏன் தர முடியாது என்றும் விஜய் கதாப்பாத்திரம் பேசியிருக்கும். இதைத்தான் மாணவர்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். சிங்கப்பூரில் இலவச மருத்துவம் வழங்கப்படுவதை படக்குழு நிரூபிக்காவிட்டால் ரூ.1 கோடியை தர வேண்டும் என்று அந்த மாணவர்கள் சவால்விடுத்துள்ளனர்.

தப்பான புள்ளி விவரம்
தப்பான புள்ளி விவரங்களை சொல்லி, மக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடுவதே படத்தின் நோக்கம் என்று மனுவில் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், படத்தில் விஜய் கதாப்பாத்திரம் பேசும் வசனமான, "கோவில்கள் தேவையில்லை, மருத்துவமனைகள்தான் தேவை" என்ற வசனம் மற்றும், கோவிலுக்குள் செருப்பு அணிந்து செல்லும் காட்சி ஆகியவற்றையும் சுட்டிக்காட்டி விஜய் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க அந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications