மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த ஜெராக்ஸ் கடை அதிபர் கைது
சென்னை: சென்னையில் திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட பெண். இவர் சென்னை அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.
அதன்படி, கல்லூரிப்படிப்பை முடித்துள்ள அவர் சென்னை வில்லிவாக்கத்தில் ஜெராக்ஸ் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அக்கடையின் உரிமையாளரான மகேஷ், அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று வந்துள்ளார். அப்பெண்ணும் அதற்கு மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அப்பெண்ணை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின்னர் அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் காட்டி உல்லாசமாக இருந்துள்ளார்.
அதன் காரணமாக அப்பெண் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால், கருவைக் கலைக்க சொல்லி மகேஷ் வற்புறுத்தியதால், அவரும் கருவைக் கலைத்துள்ளார். ஆனால், திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.
இதனால், மகேஷ் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்தப்புகார் மீதாக விசாரணை நடத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் மகேஷை கைது செய்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications