ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக போட்டி: 11 ஆம் தேதி வேட்பாளர் நேர்காணல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஏற்காடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் 11 ஆம் தேதி நடக்கிறது என தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அக்டோபர் 9, 10 ஆகிய நாட்களில் அண்ணா அறிவாயலத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேட்பாளர் நேர்காணல் வருகிற 11 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் நடைபெறும். வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் ரூ. 2,500'' எனக் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications