குட்கா ஊழல் நடந்தது உண்மைதான்.. ஆனால்.. முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் பரபரப்பு
குட்கா ஊழல் நடந்தது உண்மைதான் என்று சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: குட்கா ஊழல் நடந்தது உண்மைதான் என்று சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி அளித்துள்ளார்.
குட்கா ஊழல் இந்திய அளவில் வைரல் ஆகியுள்ளது. தமிழக அரசின் மேல் தொங்கும் பெரிய கத்தியாக இந்த ஊழல் உருவெடுத்து இருக்கிறது.
இதில் இன்னும் நிறைய முக்கியமான புதிர்கள் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் முக்கியமான கைதுகள் அரங்கேறவும் வாய்ப்புள்ளது.

சிபிஐ ரெய்டு
குட்கா ஊழல் தொடர்பாக நேற்று முதல்நாள் தமிழகத்தில் சிபிஐ திடீர் என்று ரெய்டு நடத்தியது. குட்கா விவகாரம் வெடித்துள்ள நிலையில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். குட்கா ஊழல் குறித்த சிபிஐ சோதனை தொடர்பாக ஜார்ஜ் விளக்கம் அளித்தார்.

பேட்டி அளித்தார்
நொளம்பூரிலுள்ள இல்லத்தில் வைத்து ஜார்ஜ் பேட்டி அளித்தார். மதுரை நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்று நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி ஜார்ஜ் பேட்டி அளித்தார். சிபிஐ ரெய்டு பற்றி அவர் விளக்கம் அளித்தார்.

தயார்
அதில், அரசை விசாரணை நடத்த சொல்லுங்கள், நான் வருகிறேன். என் மீது சந்தேகம் இருந்தால் விசாரணை நடத்தட்டும். சிபிஐ உட்பட எந்த விசாரணை அமைப்பு வேண்டுமானாலும் விசாரிக்கட்டும். நிறைய விசாரணை அமைப்புகள் இருக்கிறது, விசாரிக்கட்டும்.

நடந்தது உண்மை
ஆம் குட்கா ஊழல் நடந்தது உண்மைதான். குட்காவை வைத்து முறைகேடு நடந்து இருக்கிறது. இதில் பணம் கைமாறி இருக்கிறது. இதுகுறித்து நான் கொடுத்த புகார்களை விசாரிக்கவில்லை.

யார்?
அரசுக்கு இதுகுறித்து அறிக்கையும் அளித்தேன். ஊழல் நடந்தது உண்மைதான். ஆனால் யாருக்கு பணம் சென்றது என்று தெரியாது. அதை சிபிஐதான் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications