நீங்கதான் முதல்வர்! சட்டென இந்தியில் சொன்ன அமித் ஷா.. ஒரு கணம் திக்குமுக்காடிய எடப்பாடி! அட ட்விஸ்ட்
சென்னை: டெல்லி மீட்டிங்கில் எடப்பாடியை பார்த்து நீங்கள்தான் அதிமுக என்று அமித் ஷா கூறியதாக, மூத்த பத்திரிகையாளர் பாகி தெரிவித்துள்ளார்.
தொட்டதெல்லாம் வெற்றி என்று வரிசையாக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுக்கொண்டு இருக்கிறார். அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி வென்றுவிட்டார்.
தேர்தல் ஆணையமும் இவரை அதிமுக பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டுவிட்டது. இந்த நிலையில் பாஜக தரப்பும் இவரை அங்கீகரித்து உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே டெல்லியில் அண்ணாமலை - அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்திப்பு நடத்தினர்.

இந்த சந்திப்பு காரணமாக தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி அமைவதற்கான சூழ்நிலையை இந்த மோதல் ஏற்படுத்தி உள்ளது.
அந்த சந்திப்பில் சுமார் 50 நிமிடங்கள் இவர்கள் நீண்ட ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த மீட்டிங்கிற்கு பின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எங்களுக்கு எந்தவித தகராறும் இல்லை, என்று எடப்பாடி பழனிசாமி புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
இந்த சந்திப்பு காரணமாக ஓ பன்னீர்செல்வம் ஓரம்கட்டப்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது. டெல்லியின் முழு ஆசி எடப்பாடிக்கு கிடைத்துவிட்டதாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் மூவரும் நடந்திய டெல்லி மீட்டிங்கில் என்ன நடந்தது என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், தேர்தல் சமயத்தில் கண்டிப்பாக அதிமுக பாஜக கூட்டணி வைக்கும். கூட்டணி தொடரும். கடந்த தேர்தலில் என்ன நடந்தது. 20 சீட்டுகள்தான் பாஜகவிற்கு கொடுத்தார்.
எடப்பாடி - சசிகலா - டிடிவி தினகரன் எல்லாம் ஒன்று சேர வேண்டும் என்று அப்போதே அமித் ஷா சொன்னார். எல்லோரும் சேர்ந்து செல்லுங்கள் என்று கூறினார். அது எனக்கே பிடித்து இருந்தது. அமித் ஷா கோரிக்கையை எடப்பாடி கேட்கவில்லை.
நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம் என்று எடப்பாடி கூறினார். அதற்கான பரிசுதான் இப்போது எடப்பாடியை அமித் ஷா ஏற்றுக்கொண்டு உள்ளார். எடப்பாடியின் உறுதிக்கு கிடைத்த பரிசு அது.

இப்போதும் கூட டெல்லி மீட்டிங்கில் எடப்பாடியை பார்த்து நீங்கள்தான் அதிமுக என்றுள்ளார். அதோடு இந்தியில்.. நீங்கள்தான் அடுத்த முதல்வர் என்று கூறி உள்ளார். எடப்பாடியை அமித் ஷா ஏற்றுக்கொண்டு விட்டார்.
எடப்பாடிதான் அதிமுக என்று ஆகிவிட்டது. அவ்வளவுதான். இதில் பிரச்சனை இனி இருக்காது.
இன்னொரு பக்கம் திமுக பைல்ஸ் காரணமாக திமுகவினர் கதி கலங்கி போய் இருக்கிறாரக்ள். ஏனென்றால் அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். அதனால்தான் இது திமுகவிற்கு எதிராகும் என்று கூறி உள்ளேன். திமுக இமேஜை இது பாதித்து உள்ளது.

திமுகவிற்கு இது பிரஷர் கொடுக்கும். திமுகவிற்கு 2024 தேர்தலில் இது சிக்கலாக மாறும். திமுகவை இது தண்டிக்கும் என்று கூற மாட்டேன். ஆனால் திமுகவின் மன உறுதியை இது கேள்வி கேட்கும். அவர்களுக்கு பிரஷர் கொடுக்கும்.
இது கண்டிப்பாக தேர்தல் காலத்தில் எதிரொலிக்கும். அண்ணாமலை மீது ஆருத்ரா விவகார புகார்கள் உள்ளன. இது எல்லாம் மாறி மாறி வைக்கும் புகார்கள்தான். ரபேல் வாட்ச், ஜி ஸ்கோயர் எல்லாம் தேர்தல் காலத்தில் பிரச்சனையை ஏற்படுத்தாது.
அதெல்லாம் தேர்தல் நேரத்தில் பயன் அளிக்காது. அடிப்படை பிரச்சனைகள்தான் தேர்தல் நேரத்தில் பேசப்படும்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள்












Click it and Unblock the Notifications