"கக்கூஸ் முதல் ஜூவல்லரி" வரை இவங்க கிட்டயிருந்து தப்பிக்கவே முடியாது மக்களே.. வாட்ஸாப்பில் "கலகல"!
சென்னை: சில விஷயங்களிலிலிருந்து நம்மால் தப்பவே முடியாது. ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மை அது துரத்திக் கொண்டேதான் வரும்.
அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் இது. அதாவது சினிமா நடிகர், நடிகையரின் துரத்தல்தான் அது. துரத்தல்னா சும்மா இல்லை.. டாய்லெட்டில் ஆரம்பித்து நகைக் கடை வரைக்கும் விடாமல் துரத்துகிறது இந்த நடிகர், நடிகையரின் விளம்பர கூவல்கள். இதுகுறித்து வாட்ஸாப்பில் ஒரு கலகல செய்தி உலா வருகிறது.

வாங்க பார்க்கலாம்...
TOILET க்கு போனா அங்கே "அப்பாஸ்" இரண்டு விதமான ஹார்பிக்கை கையில் வைத்துக் கொண்டு நிற்கிறார்.
டீ சாப்பிடலாம்னு டீக் கடைக்கு போனா கார்த்தியும் சூர்யாவும் நிக்கிறாங்க - Bru வேணுமா Sunrise வேணுமானு கேக்குறாங்க.!
சரி குளிக்கலாம்னு பாத்ரூம்க்கு போனா, உள்ளே கரீனா கபூரும் தீபிகா படுகோனும் நிக்கிறாங்க - Lux soap வேணுமா - Dove soap வேணுமானு கேட்டுக் கொண்டு!
சாப்பிடலாமேனு உக்காந்திருந்தா சினேகா "ஆஷிர்வாத்" சப்பாத்தியை எடுத்துட்டு வர்றாங்க!
ஆணியே புடுங்க வேணாம், பேசாம ஆபீஸுக்குப் போயிரலாம்னு கிளம்பி, பைக்கை ஸ்டார்ட் பன்னுனா ஷாருக்கான் நிக்கிறாரு - Honda பைக் வாங்குங்க மைலேஜ் கொடுக்கும்னு சொல்றாரு.!
டீ பிரேக்ல பிஸ்கட் வாங்கலாம்னு கடைக்கு போனா அங்கே "அமிதாப் பச்சன்" நிக்கிறாரு - Kukies பிஸ்கட் வாங்குங்கனு சொல்றாரு.
Dress எடுக்கலாம்னு போத்தீஸ்க்கு போனா அங்கே அனுஷ்கா, திரிஷா, ராதிகா தொல்லை தாங்க முடியல!
வேஷ்ட்டி சட்டை வாங்கலாம்னு நினைச்சா "சரத்குமார், ஜெயராம், மம்மூட்டி" இவங்க தான் நம்ம முன்னாடி நிக்கிறாங்க.!
சரி நகை வாங்கலாமேன்னு போனா விஜய்யில் ஆரம்பித்து தாடி மாதவன் வரை மொத்த சினிமாக்காரங்களும் நம்ம பின்னாலயே வர்றாங்க... இது போதாதுன்னு பிரபு இன்னொரு பக்கம் தனது பெருத்த உடலை வைத்துக் கொண்டு சேதாரத்தை அடிச்சு நொறுக்கிட்டோம்லன்னு பீதியைக் கிளப்புறாரு!
முடியலை சாமி....!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications