இதைப்போய் வீரவசனம் பேசுன அண்ணாமலைக்கிட்ட கேளுங்க.. பிரஸ் மீட்டில் சீறிய சீமான்!
காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விஜய் பாடலுக்கு எழுந்து வரும் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
சீமான் பேசுகையில், கட்சி ஆரம்பித்தது முதல் தனித்துத்தான் போட்டியிட்டு வருகிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். வரும் காலங்களில் திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம் என்றார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கக்கூடாது. தம்பி அண்ணாமலையிடம் கேட்கவேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் ஒரு மீனவர் தாக்கப்பட்டாரா என வீரவசனம் பேசிய அண்ணாமலையிடம் இதைக் கேளுங்கள்" என்றார்.
மேலும் பேசிய சீமான், "அண்ணாமலை பேச வேண்டியதெல்லாம் ஆளுநர் பேசி விடுவதால் யார் பாஜக தலைவர் என்பதில் அண்ணாமலைக்கு குழப்பம். அதனால், ஆளுநர் தன்னை ஓவர்டேக் செய்துவிடுகிறார் என்பதால் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது எனச் சொல்கிறார். ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்களும் அரசியல் பேச வேண்டும். அரசியல் என்பது வாழ்வியல். மனித உடலில் இருந்து உயிரப் பிரிப்பதும் மனித வாழ்வில் இருந்து அரசியலைப் பிரிப்பதும் ஒன்று. அரசியல் இன்றி ஆளுநர் ஆகியிருக்க முடியுமா?" எனத் தெரிவித்தார்.
மக்களால் தேர்வு எம்.பியாக செய்யப்பட்ட ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ய நீங்கள் யார்? ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது மக்களாட்சிக்கு விரோதமானது. அவர் எம்.பியாக இருப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது மக்கள் தான். ராகுல் காந்தியை போட்டியாளர் என்றே கருதவில்லை எனக் கூறும் பாஜக ஏன் அவர் மீது பயந்து இப்படி வேலை செய்கிறது? எனத் தெரிவித்தார்.
மேலும், விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம். இதற்கு முன்பாக, மது குடிக்கும் காட்சிகளில், சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் விஜய் நடித்தது இல்லையா? ஊத்திக்க ஊத்திக்க என்றெல்லாம் தலைவா படத்தில் பாட்டு பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் என்ன செய்தீர்கள்? லியோ படத்தில் அவர் பாடியதில் வன்முறை வந்துவிட்டதா? கட்சி ஆரம்பிக்க போகிறார் என்றவுடன் குற்றமாகத் தெரிகிறதா?
மது ஆலைகளை இரு கட்சியினரும் வைத்திருக்கிறார்கள். அரசு கடையைத் திறந்து மது விற்கிறது. அதை விமர்சிக்க துப்பு இருக்கிறதா? ஒரு படத்தில் பாட்டு வந்ததற்காக இதைப் பேச என்ன இருக்கிறது? அதை வெட்டி தூக்கிவிட்டால் கடையை மூடிவிடுவார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications