இரும்புத் தூணில் ஏற்பட்ட மின்கசிவால் பலியான இளம் ஆசிரியை- கன்னியாகுமரியில் பரிதாபம்!
கன்னியாகுமரி அருகே துணி காய வைத்த போது இரும்புத் தூணில் இருந்து மின்கசிவு ஏற்பட்டத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கன்னியாகுமரி : துவைத்த துணியை காய வைக்கும் தூணில் இருந்து மின்சாரம் தாக்கியதால் தற்காலிக ஆசிரியை விமலா பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே பெரியவிளை பகுதியில் வசித்து வரும் விரசுர பெருமாளின் 25 வயது மகள் விமலா. இவர் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இரண்டு அண்ணன்கள், ஒரு தங்கையும் உள்ளனர்.

இந்நிலையில் தனது வீட்டு குளியலறையில் வழக்கம் போல் குளித்து விட்டு விமலா துணிகளை இரும்பு தகட்டினால் அமைக்கப்பட்ட கூரையில் உள்ள இரும்புதூணில் துணிகளை காய வைத்தபோது மின் கசிவு ஏற்பட்டுள்ளது. அதில் ஈரத்துணிகளை காயப்போட வந்த விமலா மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இதில் விமலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த கன்னியாகுமரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைப்பற்றப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விமலாவின் இரண்டு அண்ணன்களில் ஒருவர் சமீபத்தில் உவரி சென்று திரும்பி வந்த போது இரு சக்கர வாகன விபத்தில் பலியாகி ஓராண்டே நிறைவாகும் நிலையில் விமலா உயிரிழந்திருப்பது குடும்பத்தினர் மத்தியிலும், கிராம மக்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications