ஏற்காடு வந்த இடத்தில் காதலர்கள் சண்டை.. காதலியை தூக்கிச் சென்று சீரழித்த ஆட்டோ டிரைவர்கள்!

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வந்த இடத்தில் காதலர்கள் சண்டை.. காதலியை தூக்கிச் சென்று சீரழித்த ஆட்டோ டிரைவர்கள்!- வீடியோ

    ஏற்காடு: டூருக்கு வந்த காதலர்களிடையே சண்டை வந்துவிட்டது... இதை தெரிந்து கொண்ட உள்ளூர் டிரைவர்கள் 2 பேர் அந்த இளம்பெண்ணை நாசமாக்கி இருக்கிறார்கள்!

    ஈரோடு பெருந்துறையை சேர்ந்தவர் வாசுதேவன். திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் மீது காதல். அந்த பெண் தருமபுரியை சேர்ந்தவர். வயது 24. இருவரும் தீவிரமாக காதலித்தார்கள். கடைசியில் ஏற்காடுக்கு டூர் போக ரெண்டு பேரும் முடிவு செய்தார்கள்.

    சண்டை முட்டிக்கொண்டது

    சண்டை முட்டிக்கொண்டது

    அதன்படி வாசுதேவன் தனது காரில் காதலியை ஏற்றிக் கொண்டு ஏற்காடு சென்றார். அங்கு ஹோட்டலில் ஒரு அறை எடுத்து தங்கினார்கள். அப்போது நள்ளிரவில் ரெண்டு பேருக்கும் சண்டை முட்டிக் கொண்டது. ஒருவருக்கொவர் தகாத வார்த்தைகளில் திட்டிக் கொண்டார்கள். சண்டை ரொம்ப முற்றிப்போய்விட, வாசுதேவனுடன் கோபித்துக் கொண்டு அந்த நட்டநடு ராத்திரியில் இளம்பெண் ஹோட்டலை விட்டு வெளியே வந்தார்.

    டிரைவர்களிடம் புலம்பினார்

    டிரைவர்களிடம் புலம்பினார்

    அண்ணாபூங்கா அருகே இளம்பெண் ரோட்டில் தனியாக வருவதை ஆட்டோ ஒட்டுனர் விஜயகுமார், கார் ஒட்டுனர் ஆரோக்கியதாஸ் பார்த்தார்கள். அந்த பெண்ணுடன் யாரும் பின்னால் வரவில்லை என்பதை தெரிந்து கொண்டு, நைசாக பேச்சு கொடுத்தனர். ஏற்கனவே ஆத்திரத்திலும், கோபத்திலும் வந்த இளம்பெண், டிரைவர்கள் என்ன ஏதென்று விசாரிக்கவும் இன்னும் அழுகை பீறிட்டு வெடித்தது. புது ஊரில் யார் என்றே தெரியாத அந்த டிரைவர்களிடம் மொத்த கதையையும் சொல்லி அழுதிருக்கிறார்.

    சரமாரி தாக்கு

    சரமாரி தாக்கு

    திருப்பூரில் வேலை பார்க்கும் லவ் ஆனது முதல் ஹோட்டல் ரூமில் நடந்த சண்டை வரைக்கும் எல்லாத்தையும் சொன்னார். இந்த நேரத்தில் காதலி கோபித்து கொண்டு எங்கு போனாளோ என தெரியாமல், வாசுதேவன் ஓடி வந்தார். அங்கே டிரைவர்களிடம் காதலி புலம்பி கொண்டிருப்பதை பார்த்தார். உடனே டிரைவர்களிடம் போய் இந்த பெண்ணிடம் என்ன பேச்சு என்று கேட்டு வாசுதேவன் கேட்டார். அதற்கு இரண்டு டிரைவர்களும் வாசுதேவனை சரமாரியாக தாக்க தொடங்கினார்கள். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார் வாசுதேவன்.

    கடத்தி சென்றனர்

    கடத்தி சென்றனர்

    உடனே அவரிடம் இருந்த வாட்ச், செயின், மோதிரம், சட்டை பையில் இருந்த பணம் எல்லாத்தையும் பறித்து கொண்டனர். அங்கே எல்லாவற்றையும் அதிர்ச்சியில் பார்த்து கொண்டிருந்த பெண்ணையும் ஆட்டோவில் தூக்கி போட்டுக் கொண்டு சென்றார்கள். பாதி வழியில் ஆரோக்கியதாஸ் ஆட்டோவில் இருந்து இறங்கி கொண்டார். விஜயகுமார் அந்த பெண்ணுடன் ஆட்டோவில் பறந்தார். பின்னர் படுகாயம் அடைந்த வாசுதேவன், தன்னை அடித்து போட்டுவிட்டு, 2 டிரைவர்கள் காதலியை கடத்தி சென்றதாக ஏற்காடு காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

    2 பேர் சிறையிலடைப்பு

    2 பேர் சிறையிலடைப்பு

    புகாரின்பேரில் துரித விசாரணையில் ஈடுபட்ட போலீசார், 2 டிரைவர்களையும் ஏற்காடு முழுவதும் அலச தொடங்கினர். பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், விஜயகுமார் இளம்பெண்ணை ஆட்டோவில் கூட்டிச்சென்று, தனக்கு நன்கு தெரிந்த வேற ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து தங்க வைத்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு டிரைவர்களும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+