முதலிரவில் ஆபாச வீடியோ எடுத்த கணவன்.. காவல் நிலையத்தில் இளம்பெண் பரப்பரப்பு புகார்
நாகர்கோவில் : முதலிரவன்று தன்னை ஆபாச வீடியோ எடுத்ததாக கணவன் மீது இளம்பெண் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்
நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த நிவேதா என்பவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

தனக்கும் களியக்காவிளை அருகே உள்ள மடிச்சலைச் சேர்ந்த சஜூவுக்கும் கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி திருமணம் நடந்தது. சஜூ வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
திருமணத்தன்று இரவு சஜூவின் வீட்டில் எங்கள் முதலிரவு நடந்தது. அப்போது சஜூ என்னை ஆபாசமாக வீடியோ எடுத்தார். இதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரை கண்டித்து விட்டு நான் அறையில் இருந்து வெளியே வந்தேன்.
சஜூ ஆபாச வீடியோ எடுத்தது பற்றி எனது மாமனார் சரசப்பனிடம் சொன்னேன். அவர் தனது மகனை கண்டிப்பதற்கு பதில் அவன் அப்படித்தான், இதை வெளியில் சொன்னால் உன் வாழ்க்கை சீரழிந்து விடும் என கூறி என்னை எச்சரித்தார்.
அதன்பிறகு சஜூவும் அவரது குடும்பத்தினரும் என்னை சித்ரவதை செய்தனர். எனவே சஜூ மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நிவேதா தனது புகார் மனுவில் கூறி உள்ளார்.
புகாரின் பேரில் சஜூ, அவரது தந்தை சரசப்பன், தாயார் பேபி, உறவினர் அம்பிகா ஆகிய 4 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் மீது திருமண உறவில் நம்பிக்கை மோசடி,பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல்,திருமணம் ஆன பெண்ணை கணவர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கொடுமைப்படுத்துதல், மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கட்டிய மனைவியை கணவன் முதலிரவில் ஆபாச வீடியோ எடுத்ததாக இளம் பெண் கொடுத்துள்ள புகார் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications