கோயம்பேட்டில் பயங்கரம்.. வாலிபர் கழுத்து கொடூரமாக கொலை
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னலில் கழுத்து அறுத்து வாலிபர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு பஸ் நிலைய நுழைவுவாயில் எதிரே சிக்னல் உள்ளது. நேற்றிரவு சிக்னலுக்காக ஏராளமான வண்டிகள் காத்திருந்தன. அப்போது சிக்னலையொட்டி உள்ள சென்டர் மீடியன் பகுதியில் ரத்தவெள்ளத்தில் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கம் உள்ள பொதுமக்கள் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் .சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு, ரோட்டின் ஓரமாக வைத்துவிட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனிடையே அந்த வாலிபர் உயிரிழந்தார். இதையடுத்து, உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். வாலிபரின் பின் கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டுள்ளது. உடல் முழுவதும் காயங்கள் உள்ளது. எனவே, அவரை கொலை செய்து வீசியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
அவரது சட்டை பாக்கெட்டில் 20 ரூபாயும் கஞ்சா பொட்டலமும் இருந்தது. பேன்ட், சட்டை அணிந்துள்ளார். கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததால் கஞ்சா வியாபாரியாக இருக்கலாம். தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்று விசாரிக்கின்றனர். பரபரப்பு மிகுந்த கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications