ஈரோடு: போலீசார் லஞ்சம் கேட்டதால் இளைஞர் தற்கொலை.. கொட்டும் மழையில் உறவினர்கள் போராட்டம்
லஞ்சம் கேட்ட போலீசாரை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
ஈரோடு: திருட்டு வழக்கிலிருந்து விடுவிக்க போலீசார் லஞ்சம் கேட்டதால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து லஞ்சம் கேட்ட போலீசார் மீது நடவடிக்கை கோரி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள பசுவபட்டியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது வீட்டில் தங்கநகை திருடியதாக அதே பகுதியை சேர்ந்த விஜய் ஆனந்த் என்பவரை பிடித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க அவரது சகோதரர் விஜயபாஸ்கரிடம் 6 ஆயிரம் ரூபாய் போலீசார் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஜயபாஸ்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அவரது தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெருந்துறை அரசு மருத்துவமனையில் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ பகுதிக்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications