”என்னைக் கருணைக் கொலை செய்யுங்கள்” – மனதை உருக்கும் சேலம் இளைஞரின் கோரிக்கை
சேலம்: சேலத்தில் இளைஞர் ஒருவர் தன்னைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் மாதையன் குட்டை ராஜாஜி நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் நேற்று தனது தாயாருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் வருவாய் அதிகாரி செல்வராஜிடம் ஒரு மனு கொடுத்தார்.
அதில், தன்னுடைய நண்பர்கள் ஊர் திருவிழாவின்போது குடிபோதையில் அவரை அடித்துக் காயப்படுத்தியதில் படுகாயமடைந்த அவருக்கு எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் உடலை அசைக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவரது தந்தையும், தாயும்தான் வேலைக்குச் சென்று அவரைக் காப்பாற்றி வருகின்றனர்.
இதனால் அவர் தன்னுடைய மனுவில், "அய்யா தாங்கள் மனம் இறங்கி என்னை கருணை கொலை செய்ய வேண்டுமாய் இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு இப்போதைய நிலை மருத்துவமனையில் சென்று பார்க்க முடியவில்லை. எங்கு சென்றாலும் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பி விடுவதாலும், செலவு செய்ய முடியாத சூழ்நிலையிலும் தயவு செய்து எனக்கு உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தற்பொழுது என்னை மீண்டும் கொலை செய்து விட்டால் கூட பரவாயில்லை. இப்போது வலியின் காரணமாகவும் தாங்க முடியாத காரணத்தாலும் என் முழுமனதுடன் சம்மதிக்கிறேன். தயவு செய்து கருணை கொலை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications