கையில் ’மை’, செல்ஃபி படம்... நேத்து பேஸ்புக்ல நிறைய பேரோட ப்ரொபைல் பிக் இது தான்!
சென்னை: நேற்று நிறைய இணையவாசிகள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தாங்கள் வாக்களித்ததைப் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தனர்.
வாக்களிப்பது நமது கடமை என்ற விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது. நடந்து முடிந்த தேர்தல்களில் அதிகரித்துள்ள வாக்குப்பதிவே இதற்கு சாட்சி.
அதிலும் குறிப்பாக இந்த லோக்சபா தேர்தலில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்களின் ஆறாம் விரலாய் மாறிப்போன செல்போனில் தும்மல் போடுவதைக் கூட அப்டேட் செய்பவர்கள் ஜனநாயக கடமை செய்ததை பெருமையாக சொல்லாமல் இருப்பார்கள்.
இதனால் நேற்று தாங்கள் வாக்களித்து விட்டதைப் படத்தோடு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர் பல நெட்டிசன்கள்.

கறுப்பு மை பிக்’ஸ்....
நிறைய பேர் தங்களது புரொபைல் பிக் எனச் சொல்லப்படும் புகைப்பட இடத்தில் வாக்களித்ததற்கு சாட்சியாக தங்களது மை பூசப்பட்ட விரல் படங்களைப் பதிவேற்றம் செய்திருந்தனர்.

ஓட்டுப் போட்டுட்டோம்....
சிலர் ஒரு படி மேலே போய், தங்களது மையிடப்பட்ட விரல்களை தூக்கிக் காட்டி தங்களது புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தனர்.

இது தான் எங்கள் அடையாளம்...
இன்னும் சிலரோ கையில் வாக்குப் பதிவிற்கு கொண்டு செல்லப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்டவற்றோடு புகைப்படத்தை போட்டிருந்தனர்.

அப்போ நீங்க...?
புகைப்படங்களோடு, ‘நான் ஓட்டளித்து விட்டேன்... அப்போ நீங்க?', நாங்கள் எங்கள் ஜனநாயகக் கடமையை முடித்து விட்டோம்' என விதவிதமாக கருத்துக்களைப் பதிவேற்றம் செய்திருந்தனர்.

விழிப்புணர்வு கருத்துக்கள்...
சிலர் சீக்கிரம் வெயிலுக்கு முன் சென்று வாக்களியுங்கள் என விழிப்புணர்வு பிரச்சாரக் கருத்துக்களை எல்லாம் வெளியிட்டிருந்தனர்.

இங்கதான் ஓட்டுப் போட்டோம்...
இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், பலர் வாக்குச்சாவடி அருகிலேயே நின்றபடி தங்களது புகைப்படத்தை எடுத்திருந்தது தான்.

பிரியமானவர்கள்...
சிலர் தங்களுக்கு பிரியமான அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாக்களித்த புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்திருந்ததைப் பார்க்க முடிந்தது.

கெடுபிடி இல்லை...
வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப் பட்டிருந்தது. ஆனால், அது முறையாக காப்பாளர்கள் மூலம் பல்வேறு இடங்களில் சோதனை செய்யப் படவில்லை. எனவே வாக்காளர்கள் எளிதாக செல்போனை பயன் படுத்தினார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications