கணவர் குடும்பத்தின் தொடர் டார்ச்சர்.. தாங்க முடியாமல் தவித்த நிஷா.. கிச்சனில் தூக்கில் தொங்கினார்!
வரதட்சணை கொடுமை தாங்காமல் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
கும்பகோணம்: டார்ச்சர் தாங்க முடியாமல் கிச்சனில் தூக்கு போட்டுக் கொண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இளம் பெண் நிஷா! இந்த சம்பவம் கும்பகோணத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் அருகே திருமங்கலக்குடியைச் சேர்ந்தவர் முகமது காபூஸ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர்.
இவருக்கும், மயிலாடுதுறை அருகே வடகரையைச் சேர்ந்த காபத்து நிஷா என்பவருக்கும் கடந்த மூன்றரை வருஷங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

சித்ரவதை
அப்போது 30 சவரன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நிலையில், அதில் 13 சவரனை நிஷா தனது பெற்றோரிடம் திரும்ப கொடுத்துவிட்டதாக தெரிகிறது. அந்த நகையை முகமது காபூஸ், மற்றும் அவரது பெற்றோர் திரும்ப கேட்டு, நிஷாவை சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை?
இந்நிலையில் நிஷா கிச்சனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது பெற்றோருக்கு கணவர் தரப்பில் இருந்து அதிர்ச்சி தகவலை தந்தனர். இதைக் கேட்டு பதறியடித்து கொண்டு வந்த தந்தை, "என் மகள் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பே இல்லை, என்னமோ மர்மம் உள்ளது என்று கதறி அழுதார். விரைந்து சென்ற போலீசாரும் நிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சந்தேகம்
இதனிடையே, வரதட்சணை கேட்டு கணவர் முகமதுகாபூஸ், அவரது தந்தை அப்துல்ஹலீம், தாய் ரசியா பானுஆகியோர் மகளை சித்ரவதை செய்ததாகவும், மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் நிஷாவின் தாய் ஆயிஷா மரியம் திருவிடைமருதூர் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார்.

விசாரணை
இதன்பேரில், எப்ஐஆர் பதியப்பட்டு உள்ளது. நிஷாவுக்கு கல்யாணம் ஆகி மூன்றரை ஆண்டுகளே ஆகியுள்ளதாலும், வரதட்சனை புகார் கொடுக்கப்பட்டுள்ளதாலும், கும்பகோணம் கோட்டாட்சியர் இந்த விசாரணை துவங்கி உள்ளார். மேலும், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் நிஷாவின் மரணம் தற்கொலையா, கொலையா என்றும் தெரியவரும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications