கிழிந்த பேண்ட்... ஆசனவாயில் காற்றை செலுத்திய நண்பர்கள்: உடல் ஊதிய வாலிபர் கவலைக்கிடம்
சென்னை: ஆசனவாய் வழியாக காற்று செலுத்தப்பட்ட அம்பத்தூர் வாலிபர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
நண்பர்களின் விளையாட்டுத்தனம் விபரீதமாகிய சம்பவம் ஒன்று அம்பத்தூரில் நடந்துள்ளது. அம்பத்தூர் அத்திப்பட்டு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த மோகன் என்பவரது மகன் கார்த்திக். 24 வயதான கார்த்திக் அம்பத்தூர் எஸ்டேட் வாவின் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் பணி புரிந்து வருகிறார்.
கார்த்திக்கின் நண்பர்களான ஐயப்பாக்கத்தைச் சேர்ந்த விஜய் என்கிற விஜயகுமார் (22), வினோத்குமார்(23) ஆகிய இருவரும் அதே கார் விற்பனை நிலையத்தில் தான் பணி புரிந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் மூன்று பேரும் காற்றடிக்கும் இயந்திரத்தின் மூலமாக கார்களைச் சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது எதேச்சையாக கார்த்திக்கின் பேண்ட் பின்புறத்தில் கிழிந்திருந்ததைக் கண்ட விஜயும், வினோத்தும் விளையாட்டுத் தனமாக கார்த்திக்கின் ஆசனவாயில் காற்றடிக்கும் இயந்திரத்தை வைத்துள்ளனர். இதனால், கார்த்திக்கின் உடல் உப்பியுள்ளது. உடனே, கார்த்திக் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
விளையாட்டுத் தனமாக செய்த காரியம் விபரீதமாகியதைக் கண்டு பதறிய நண்பர்களின் அலறல் கேட்டு விரைந்து வந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக கார்த்திக்கை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
தற்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் கார்த்திக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மகனுக்கு நடந்த கொடுமை குறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் கார்த்திக்கின் தந்தை மோகன் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் வினோத் மற்றும் விஜயைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications