ஆன்லைனில் அதிமுக... விறுவிறுப்பாக குவியும் புதிய உறுப்பினர்கள்
சென்னை: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் அதிமுகவில் புதிய உறுப்பினர்களாக ஆன்லைன் மூலம் இணைந்துள்ளனராம்.
ஆன்லைன் போட்டியில் அதிமுக விறுவிறுப்பாகியுள்ளது. ஆன்லைன் மூலம் அதிமுகவில் இணைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்.
அதுலும், இந்த 10 ஆயிரம் பேரில் பெரும்பாலானவர்கள் படித்த இளைஞர்கள் என்பது அதிமுக தலைமையை உற்சாகப்படுத்தியுள்ளதாம்.
இணையம் வாயிலாக....
தற்போது தேர்தல் காலம் என்பதால் எல்லா வகையிலும் கட்சியைப் பலப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சிகளும் களம் இறங்கியுள்ளன. அந்த வகையில் இன்டர்நெட்டை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
சமூகவலைதளங்கள் வாயிலாக...
பேஸ்புக், டிவிட்டர் என்று எதையும் விடாமல் அத்தனையிலும் அத்தனை கட்சிகளும் கால் பதித்து கலகலக்கி வருகின்றன.
பேஸ்புக் ஆட்சி...
பேஸ்புக்தான் இதில் அதிகமாக புழங்கப்படும் நடைமேடையாகியுள்ளது. பேஸ்புக்கில் தற்போது அதிமுக, திமுக, ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் என அனைத்துக் கட்சியினருக்கும் பக்கம் உள்ளது.
முன்னோடிகளை மிஞ்சிய அம்மா....
இதில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஏற்கனவே முன்னோடிகளாக உள்ளனர். ஆனால் அவர்களை விட ஜெயலலிதா பெயரிலான பேஸ்புக் பக்கம் இன்னும் ஒரு படி மேலே போய் ஜெயலலிதாவின் பிரசார வீடியோக்களையும் இணைத்து முன்னணியில் உள்ளது.
ஆன்லைனில் உறுப்பினர் அட்டை...
தற்போது ஆன்லைன் மூலம் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது அதிமுக. அதன்படி, அதிமுகவில் உறுப்பினராக விரும்புவோர், தாங்களாகவே ஆன் லைன் மூலம் பெயரை பதிவு செய்துகொண்டு உறுப்பினர் அட்டை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தகவல்கள்...
இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏராளமான இளைஞர்கள் தங்கள் பெயர், விலாசம், எந்த தொகுதியை சேர்ந்தவர், தொழில், வயது உள்பட தகவல்களை அளித்து ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் பதிவு செய்து வருகிறார்களாம்.
10 நிமிடத்தில்...
இதில் பதிவு செய்து கொண்டவர்களுக்கு, அந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை 10 நிமிடத்தில் கிடைத்து விடுகிறது. ஒரே வாரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதன்மூலம் தங்களை உறுப்பினராக இணைத்து கொண்டுள்ளனர்.
இது தான் அதிமுக இணையதளம்....
http://www.aiadmk.com/ இதுதான் அதிமுகவின் புதுப்பிக்கப்பட்ட புதிய இணையதளம். இந்த இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார திட்டங்கள், அவர் போகும் ஊர், அவர் பேசம் இடம் உள்ளிட்டவற்றை அப்டுடேட்டாக வைத்துள்ளனர்.
புத்தம் புது பொலிவுடன்...
சில மாதங்களுக்கு முன்புதான் இந்த இணையதளம் சிலரால் ஹேக் செய்யப்பட்டது. அதையடுத்து முடக்கி வைக்கப்பட்ட இந்த இணையதளம் தற்போது புத்தம் புதுப் பொலிவுடன் களை கட்டிக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications