பழிவாங்குவதற்காக, கல்லூரி மாணவி போட்டோக்களை வாட்ஸ்அப்பில் உலவ விட்ட வாலிபர் கைது!
நெய்வேலி: காதலி படத்தை வாட்ஸ்அப்பில் பரப்பிய வாலிபர் எழிலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் வாட்ஸ்அப் பயனாளிகள் பலருக்கும், ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் வந்தவண்ணம் இருந்தன. மேலும், அந்த இளம் பெண் பெயரை போட்டு, இவர் இரு ஆண்களை காதலித்து ஏமாற்றியவர் என்ற வகையில் தகவல்களும் அதனுடன் இருந்தன.

அந்த படத்தில் இருப்பது கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் எழிலன் (25), என்பதும், உடன் இருப்பது அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது. அந்த கல்லூரி மாணவி, வேறு ஒரு வாலிபருடன் நட்பு வைத்ததால் ஆத்திரமடைந்த எழிலன் இவ்வாறு வாட்ஸ்அப்பில் தங்களது படங்களை அனுப்பி வைத்திருந்துள்ளார்.
மேலும், அந்த பெண்ணுடன் எழிலன் பேசும், தொலைபேசி உரையாடலும், வாட்ஸ்அப் மூலம் உலவியது. அதில், என்னை ஏமாற்றிய உன்னை சும்மா விடமாட்டேன், வாட்ஸ்அப்பில் படத்தை போடுவேன் என்று மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில், அந்த மாணவி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எழிலனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அந்த மாணவி, திருச்சி கல்லூரியில் படித்து வந்ததும், இந்த தொல்லைகள் காரணமாக, அவரது பெற்றோர் படிப்பை நிறுத்திவிட்டதும் குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப்பில் வெளியிட்ட போட்டோவுக்காக இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளவாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்ட ஆசிரியை, தனது மாணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் தொடர்பாக, வாட்ஸ்அப்பில் வேறு சிலரின் போட்டோக்களை போட்டு வதந்தி பரப்பி மகிழ்ந்தனர் வாட்ஸ்அப் பயனாளிகள். எனவே, இனிமேல், இதுபோன்ற படங்களை ஃபார்வேர்டு செய்யும்போது யோசித்து செய்வது அவசியம் என்ற பாடத்தை இந்த கைது நடவடிக்கை கற்றுக்கொடுத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications