வேலூர் கோட்டையில் மாணவி கையைப் பிடித்து இழுத்த வாலிபர்.. கல்லால் அடித்தே விரட்டிய மற்றொரு மாணவி

வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த மாணவியின் கையை பிடித்து இழுத்த வாலிபரை கல்லால் அடித்து விரட்டியுள்ளார் மற்றொரு மாணவி.

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் கோட்டையில் பள்ளி மாணவியிடம் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயற்சி செய்த வாலிபரை மற்றொரு மானவி கல்லால் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வேலூரின் மையப்பகுதியில் புகழ்பெற்ற கோட்டை உள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க கோட்டைக்கு நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள், என நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பலர் வந்து செல்கின்றனர்.

 youth attacked by school studens in vellore

இந்நிலையில் திங்கள்கிழமை கோட்டையை சுற்றி பார்ப்பதற்காக 2 பள்ளி மாணவிகள் வந்துள்ளனர். கோட்டையின் அழகை சுற்றிபார்த்தவாறு அங்குள்ள மதில்சுவர் ஓரம் நின்றிருந்தனர் மாணவிகள். அப்போது அங்கு புதரில் மறைந்திருந்த ஒரு வாலிபர் திடீரென்று மாணவியின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு மாணவி அங்கிருந்த கருங்கற்களை எடுத்து சரமாரியாக வீசினார். இதனால் பயந்துபோன அந்த வாலிபர் அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். ஆனால் மாணவி விடாமல் துரத்தியபடி நுழைவுவாயில் வரை வந்தனர். இதைபார்த்ததும் அங்கிருந்தவர்கள் திரண்டு வாலிபரை பிடிக்க முயன்றும் முடியவில்லை.

பின்னர் மாணவியிடம் விசாரித்தபோது இச்சம்பவம் தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் துணிச்சலை அவர்கள் பெரிதும் பாராட்டினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் நடைபெறும் அத்துமீறல் சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+