சென்னையில் பரபரப்பு.. காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திகுத்து.. இளைஞர் வெறிச்செயல்!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சென்னை கோயம்பேட்டில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் முகத்தில் குத்தி கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தனியார் நிறுவனமான ஆச்சி மசாலா தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் சிவரஞ்சனி(25) சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் இவர், தீபாவளி பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊரான திருவாரூக்கு செல்ல நேற்றிரவு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது தமிழக தேர்தல் ஆணையம் அருகே அவரை வழி மறித்த இளைஞர் ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணை குத்தியுள்ளார்.

இதில் முகத்தில் குத்துபட்டு உதடு பகுதி கிழிந்துள்ளது. இதையடுத்து சிவரஞ்சனி கூச்சலிட்டதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞரை மடக்கி பிடித்து கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர். கத்தி குத்தால் காயம் அடைந்த இளம் பெண் சிவரஞ்சனி சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிடிபட்ட இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் அரவிந்த் (32) என்பதும் கிண்டியில் வசித்து வருவதாகாவும் தெரியவந்தது.
மேலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அரவிந்த்தும், சிவரஞ்சனியும் ஒரு பிபிஓ நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றி உள்ளனர். அப்போது, அரவிந்துக்கு சிவரஞ்சனி மீது ஒருதலைக் காதல் உருவாகி உள்ளது. ஆனால் சிவரஞ்சனி அரவிந்தை காதலிக்கவில்லை. அவனது காதலை ஏற்க மறுத்துவிட்டார். அரவிந்த்குமார் தொடர்ந்து தொல்லை கொடுக்கவே தான் பார்த்து வந்த பிபிஓ பணியை விட்டுவிட்டு ஆச்சி மசாலா கம்பெனியில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
ஆனாலும், அரவிந்த்குமார் தொடர்ந்து தொல்லை தந்து வந்துள்ளார். சிவரஞ்சனியும் தொடர்ந்து மறுத்துவந்துள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த அரவிந்த் சிவரஞ்சனியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் கத்தியால் குத்தப்பட்ட இளம்பெண் சிவரஞ்சனி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். போலீஸார் அரவிந்தை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அரவிந்து தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications